தற்கால இலக்கியம் ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

கணினி யுகத்தின்
இனிக்கும் கற்கண்டு
ஹைக்கூ

சுருங்கச் சொல்லி
விளங்க வைக்கும்
ஹைக்கூ

மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ

சொற்ச் சிக்கனம்
தேவை இக்கணம்
ஹைக்கூ

அளவு சிறிது
அர்த்தம் பெரிது
ஹைக்கூ

அனுபவத்தின்
அற்புதம் கூறும்
ஹைக்கூ

நடக்காமலே பயணிக்கலாம்
பார்க்காமலே பார்க்கலாம்
ஹைக்கூ

தற்கால இலக்கியத்தின்
தகதகப்பு
ஹைக்கூ

உருவத்தில் கடுகு
உணர்வில் இமயம்
ஹைக்கூ

தேவையற்ற சொற்கள்
நீக்கிட பிறக்கும்
ஹைக்கூ

ஆறு முதல் அறுபது வரை
ரசித்துப் படிக்கும்
ஹைக்கூ

இயந்திரமாகி விட்ட மனிதனை
மனிதனாக்கிடும் மருத்துவம்
ஹைக்கூ

படித்தால் பரவசம்
உணர்ந்தால் பழரசம்

ஹைக்கூ

கருத்துகள்