- நூலின் பெயர் : நெஞ்சத்தில் ஹைக்கூ
- நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
- மதிப்புரையாளர் : மு.செல்லா
கவிஞர் இரா.இரவியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. ஏற்கனவே இவரது “விழிகளில் ஹைகூ” “உள்ளத்தில் ஹைகூ” என்ற இரண்டு ஹைகூ கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நவீன கவிதை வடிவங்களில் சிறியவர், பெரியவர், அதிகம் படித்தவர், ஓரளவே படித்தவர் என்ற பேதம் இன்றி அனைத்துத் தரப்பினராலும் பரவலாக வரவேற்று வாசிக்கப்படுபவை குறும்பா என்னும் ஹைகூ கவிதைகளாகும். ஆளமான செய்திகளையும் சுருக்கென்று ஒருசில வார்த்தைகளிலேயே நம்முள் பதிய வைத்துவிடுபவை என்பதால் இதற்கான வரவேற்பு நாட்டின் எல்லைக்ள தாண்டி மொழிகளைத்தாண்டி அமைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.
தமிழில் ஹைகூக்களின் மீதான சோதனை முயற்சி மிகச் சமீபத்திலானது என்றாலுமகூட வீரயம் மிக்க நல்ல கவிதைகள் அதிகம் தென்படத்துவங்கியுள்ளன. தமிழில் தேர்ந்த ஹைகூ கவிஞர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் இரா.இரவி. இவரது கவிதைகள் பல்வேறு மேடைகளில், இணைய தளங்களில், ஒருபடி மேலே போய் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளதே இவரது கவிதைத் திறனுக்கு சிறந்த சான்றாகும். “நெஞ்சத்தில் ஹைகூ” என்ற இந்நக் கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞர் ஹைகூ கவிதைகளின் ஆர்வலர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.
தமிழில் முதுபெரும் எழுத்தாளரும், தனது “புதுக்கவிதைகள் – தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆய்வு நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவரும், மிகச் சிறந்த ஆய்வறிஞருமான வல்லிக் கண்ணன் அவர்களின் அணிந்துரை நூலுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும், மணிமகுடமாகவும் திகழ்கிறது. “இனிய ஹைகூ” இதழின் ஆசிரியரும் கவிஞருமாகிய மு.முருகேஷின் மதிப்புரையும் இந்நூலுக்கு அளகு சேர்த்துள்ளது.
அழகியல், காதல், இயற்கை, பகுத்தறிவு, அறிவியல், சுயமுன்னேற்ற கருத்துக்கள், சமூக அவலங்களின் மீதான சாடல் என அனைத்து நிலைகளிலும் இவர் ஆக்கியுள்ள கவிதைகளின் தொகுப்பாகவும் இது மலர்ந்துள்ளது. அவற்றில் பலவும் வசீகர மணத்தை வெளிப்படுத்தியுள்ளது கூடுதல் சிறப்பாகும்…………………….
கவிஞர் இரா.இரவியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. ஏற்கனவே இவரது “விழிகளில் ஹைகூ” “உள்ளத்தில் ஹைகூ” என்ற இரண்டு ஹைகூ கவிதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.நவீன கவிதை வடிவங்களில் சிறியவர், பெரியவர், அதிகம் படித்தவர், ஓரளவே படித்தவர் என்ற பேதம் இன்றி அனைத்துத் தரப்பினராலும் பரவலாக வரவேற்று வாசிக்கப்படுபவை குறும்பா என்னும் ஹைகூ கவிதைகளாகும். ஆளமான செய்திகளையும் சுருக்கென்று ஒருசில வார்த்தைகளிலேயே நம்முள் பதிய வைத்துவிடுபவை என்பதால் இதற்கான வரவேற்பு நாட்டின் எல்லைக்ள தாண்டி மொழிகளைத்தாண்டி அமைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.
தமிழில் ஹைகூக்களின் மீதான சோதனை முயற்சி மிகச் சமீபத்திலானது என்றாலுமகூட வீரயம் மிக்க நல்ல கவிதைகள் அதிகம் தென்படத்துவங்கியுள்ளன. தமிழில் தேர்ந்த ஹைகூ கவிஞர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர் இரா.இரவி. இவரது கவிதைகள் பல்வேறு மேடைகளில், இணைய தளங்களில், ஒருபடி மேலே போய் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பிடித்துள்ளதே இவரது கவிதைத் திறனுக்கு சிறந்த சான்றாகும். “நெஞ்சத்தில் ஹைகூ” என்ற இந்நக் கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞர் ஹைகூ கவிதைகளின் ஆர்வலர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.
தமிழில் முதுபெரும் எழுத்தாளரும், தனது “புதுக்கவிதைகள் – தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆய்வு நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றவரும், மிகச் சிறந்த ஆய்வறிஞருமான வல்லிக் கண்ணன் அவர்களின் அணிந்துரை நூலுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும், மணிமகுடமாகவும் திகழ்கிறது. “இனிய ஹைகூ” இதழின் ஆசிரியரும் கவிஞருமாகிய மு.முருகேஷின் மதிப்புரையும் இந்நூலுக்கு அளகு சேர்த்துள்ளது.
அழகியல், காதல், இயற்கை, பகுத்தறிவு, அறிவியல், சுயமுன்னேற்ற கருத்துக்கள், சமூக அவலங்களின் மீதான சாடல் என அனைத்து நிலைகளிலும் இவர் ஆக்கியுள்ள கவிதைகளின் தொகுப்பாகவும் இது மலர்ந்துள்ளது. அவற்றில் பலவும் வசீகர மணத்தை வெளிப்படுத்தியுள்ளது கூடுதல் சிறப்பாகும்……
கருத்துகள்
கருத்துரையிடுக