அனிச்சங்கள் கிளைத்த கொடி , நூல் விமர்சனம் : கவிஞர்
இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிவாணன்
நூலின் பெயரே இலக்கியத்தரமாக, கவித்துவமாக உள்ளது. கவிஞர் ஜீவி-யின் அணிந்துரை
நூலின் சிறப்பைப் பறைசாற்றுகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் திண்டுக்கல்
மாவட்ட தமுஎச-வின் மாவட்ட துணைச் செயலர், சிற்றிதழ்களில் தொடர்ந்து இயங்கி
வருபவர், இளைஞர், பெயருக்கேற்றபடி கவிதை பொழிந்து வருபவர்.
சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத கவிதை எழுதி வருகின்றனர். ஆனால் இவர்
கவிதை வாசிக்கும் போது அனைவருக்கும் புரியும் எளிய நடை.”அம்மாவின் விருப்பம்”
என்ற கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் அம்மா நினைவு வந்து விடுகிறது. இது
தான் ஒரு படைப்பாளியின் வெற்றி.ஆனாதிக்க சிந்தனையை நமது சமுதாயம் குழந்தை
பருவத்திலேயே விதைத்து விடுகின்றது. ஆண் குநை;தைக்கு துப்பாக்கி பொம்மையும்,
பெண் குநை;தைக்கு சிட்டி பானை பொம்மைகளும் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை
உழிக்க வேண்டும்.
*இதோ ! கவிஞரின் சிந்தனை
தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் “ஆம்பளைகளை இந்த வேளையைச் செய்யுறது
என்று
சொல்லிச் செல்பவளிடம் எப்படி சொல்வது
வேலையில் ஆண் பெண் பேதமில்லையென்று” *
ஆண், பெண் சமத்துவத்தை இயல்பாக சொல்லி உள்ளார் புதுக்கவிதையில்.
*அன்பாக வளர்த்த மகளை மணமுடித்து கொடுத்து பின்பு மகளின் வருகைக்காக ஏங்கும்
தாயின் பாசத்தை பதிவு செய்யும் கவிதை இதோ!
வீட்டுக் கூரையில் காகம் கரையும் போது
வீட்டுக் கதவை எவரோ தட்டும் போதும்
தொலைபேசி மணி ஒலிக்கும் போதும்
திருமணமாகிப் போன தன் மகளின் முகம் பார்க்க
ஏக்கத்தோடு விரைகிறாள் அம்மா.
இந்த நூலின் ஹைக்கூ கவிதைகளும் உள்ளது:
வெட்டிய பிறகும்
வேரில் மணம் *
*கண்ணீர்
குழந்தையின் அழுகை
பேருந்து இறுக்கம்
கசங்கிப் போனது மனசு *
*
*
*இரவின் மடியில்
இதமாய் இருக்கிறது
இரயிலின் சன்னஸ் சுகம்*
*
*
*நிழல் பரப்பிய மரம்
குறைந்த அணில்கள்
மண்தாமரை எங்கும் பூக்கள் *
*
*
*நிறைய பேச
நினைக்கின்றது மனசு
பிரிவின் கணத்தில் *
*
*
*நிசப்தம் உடைத்து
பிறந்த வாசத்தோடு குழந்தை
மலரெங்கும் கண்ணீர்*
ஓவ்வொரு ஹைக்கூ கவிதைகளும் சிந்தனையை விதைக்கின்றது. சொற்சிக்கனத்துடன் மிக
நேர்த்தியாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்.
இல்லத்தில் அம்மாவின் பணிச்சுமையை, அதனை மதிக்காத மகன்களின் அலட்சியத்தை
உணர்த்திடும் புதுக்கவிதையை. இந்த புதுக்கவிதையை படித்த பின்பு, அம்மாவின்
உழைப்பை, மனைவியின் உழைப்பை உணர்வார்கள் ஆண்கள் என்பது உண்மை !
*மகளின் திருமணத்திற்குப் பிறகு
சுமை அதிகமாகிப் போனது
அம்மாவிற்கு சமைத்தல், பரிமாறுதல், துவைத்தல்
என எல்லா வேலைகளும்
உதவியேதும் செய்யாமல்
வேவைக்குச் செல்லும் அவசரத்தில்
கடிந்து போகிற மகனை
“பார்த்துப் போ” என்கிறார் அம்மா.
*
இப்படி குடும்ப உறவின் மேன்மையை,பாசத்தை,உள்ளத்து உணர்வுகளை நயம்பட பதிவு
செய்துள்ளார். கவிஞர் உணர்ந்த உணர்வை,வாசகனுக்கும் உணர்த்திடும் கவிதைகளின்
தொகுப்பு.
*வாழ்க்கை முழுவதும் உழைத்துப் போட்ட அப்பாவும்
வீட்டு மனிதராகப் போனார்
இப்போது இரவு பகல் பாராது பாடுபடும்
அம்மா மீது சுமைகளை ஏற்றி
புகுந்த வீட்டுக்குப் போன பின்னும்
நிறைமாத கர்ப்பிணியானாலும்
பெற்றவளுக்குப் பணிவிடை செய்யும்
ஏக்கத்தோடு ஒடி வருகிறாள் தங்கை.
*
மணமான பின்னும் குடும்ப பாசத்துடன், நேசத்துடன் பெண் மகள் இருக்கிறாள் என்ற
நடப்பு உண்மையைச் சொல்லி,நமக்குக் காட்சிப்படுத்தி பெண் இனத்தை
பெருமைபடுத்துகின்றார்.
இன்று கோடீஸ்வரர்கள் மேலும் கொடீஸ்வரர்கள் ஆகின்றனர். கோடித்துணியே காண முடியாத
ஏழைகள்,வறுமையில் வாடுகின்றனர். இந்தியா,அக்கினி ஏவகனை ஒன்று இரண்டு ஏவுp
விட்டோம். மூன்று ஏவப் போகிறோம் என ஒருபுறம் மார்தட்டி கொண்டாலும்,மறுபுறம்
வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதெ உண்மை.
*பறை அடித்துக் கொண்டிருக்கிறது
ஒனின் உயிர்க்கசிவு
தன்னை அறியாது இருவரின் கண்களிலும் வடிகிறது கண்ணீர்
நினைவுகள் நீள்கிறது. இருவருக்கும் பாத்திர பண்டங்களும்,
அடகுக்கு ஆகாமல் கிடக்கிறது.
மனைவியின் தாலியில் ஒரு குண்டுமணி தங்கமும் கிடையாது.
எந்த எஜமானனும் இந்த நேரத்தில் குடிசையைக் கொளுத்தவுமில்லை
அப்படியாவது ஆத்தாளுக்கு கொள்ளி போட்டிருப்போம்
அப்படியுமில்லை எங்க வீட்டு எழவுக்கு
தப்படிக்க எவனக் கூப்புடறது சீக்கிரமாக தூங்குங்க சாமி,
எங்க ஆத்தா எழவுக்கு நாங்களே தப்படிக்கனும்.*
உணர்த்திடும் கவிதை. ஏழ்மையைப் பற்றி இதை விட எளிமையாக, இயல்பாக காட்சிப்படுத்த
முடியாது. இது வெறும் கற்பனைக் கவிதை அல்ல. இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட
சமுதாயத்தில் உள்ள வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்திய கவிஞஞருக்குப்
பாராட்டுக்கள். நிறைய இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது. அடுத்தப் பதிப்பில்
கவனமாக பிழை நீக்கி வெளியிடுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக