
- நூலின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ
- நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
- மதிப்புரையாளர் : கவிஞர் லட்சுமி வாசுதேவன்
�பாராளுமன்றம் இருக்கட்டும்
சபரி மலையில் தாருங்கள்
இடங்கள் ஒதுக்கீடு�
பெண்களுக்குச் சம இடம் கோவில்களில் இல்லையெனக் கவலையுறுகிறார் கவிஞர். என்னைப் பொறுத்தவரை பெண்ணை மலராக, நதியாக, கொடியாக மதிக்க வேண்டாம். பெண்ணைப் பெண்ணாக மதியுங்கள் அன்பைக் காட்டுங்கள். மூடநம்பிக்கையினைக் கவிஞர் சாடுகின்றார் இந்த ஹைக்கூ வாயிலாக
�கடன் பெருகியது
அட்சய திரிகியில் வாங்கிய
தங்கத்தினால்�
உங்களது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. �கருப்புப் பணம் ஒழிக்க
படம் எடுத்துச் சேர்த்தனர்
கருப்புப் பணம்�
சினிமா தோன்றிய காலம் முதல் கருப்புப் பணம் விளையாடியே வருகின்றது என்று மேலேயுள்ள ஹைக்கூ மூலமாக உணர்த்துகிறார் கவிஞர்.
தனியொருவறுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழிப்போம்
என பாரதி பாடிய நம் நாட்டில் தான்
ஆறகாலப் பூஜை
ஆலயத்தில் கடவுளுக்கு
பட்டினியில் மனிதன்!
கவிஞர் பட்டினித் துயரினை இந்த ஹைக்கூவில் சொல்லி வருந்துகின்றார். ஏழைகளின் பசித் துயர் துடைப்பதே பெரிய அறமெனச் சொல்கின்றார்.
மனித நேயமற்ற இவ்வுலகில் சுயநலமே எங்கும் தலைதூக்கி நிற்கிறது. என்று கவிஞர் மனம் வெதும்பி இந்த ஹைகூவில் சொல்கிறார். பாறையிலும் செடி
மனித மனங்களில்
மனித நேயம்?
மனித நேயம் எங்கே? எங்கே என வினா எழுப்பி நம்மை சிந்திக்க வைப்பது காண்கின்றோம்.
மண் வெளுக்கச் சாணையுண்டு ஆனால் மனம் பெருக்கச் சாணையில்லை எனப் பெருங்கவி பாடிச் சென்றது நம் நினைவில் வருகின்றது.
வரதட்சணைக் கொடுமையினை எதிர்த்து, வெறுத்து நம் கவிஞர் இரவி இவ்வாறு எழுதுகின்றார். கிண்டலாக அவர் சொல்வது
பெண் பார்க்க வந்தனர்
நாய் குரைத்தது
திருடர்கள் வருவதாய்!
முற்றிலும் சரியே! திருடனை உபசரித்து விருந்தளித்து பெண்ணும் தந்து மாப்பிள்ளையாக்கி மனம் குமுறும் பெண்ணின் தந்தையின் கண்ணுக்கு மாப்பிள்ளை திருடனே! ஆண்மீக வாதிகளும் காமுகர்களாகிச் சீரழிக்கின்றனர் என்பதனை இந்த ஹைக்கூ வாயிலாகச் சொல்கின்றார் வெறுப்பின் உமிழ்கின்றார் கவிஞர் இரா.இரவி இவ்வாறாக
காவி உடையில் மட்டுமல்ல
வெள்ளை உடையிலும்
காமுகர்கள்!
வெள்ளை உடையிலும் உலவித் தீங்கு செய்பவர்களை அந்தக் கள்ளமனங் கொண்ட தீயவர்களை இனங்கண்டு நாமே வெறுத்துப் புறந்தள்ள வேண்டும் என்கிறார்.இதுவே கவிஞரது விருப்பம் .
விலை கொடுத்து வாங்கிய நாய்க்கு வேண்டி,வேண்டி உணவளிக்கின்றனர் ஆனால் அதே சமயம் பசித்த இளம் மழலையர்களைக் கண்டால் வெறுத்துத் தள்ளிகின்ற அவலத்தினைக் கவிஞர் .
அம்மா தாயே
மனிதனை விரட்டி விட்டு
நாய்க்குக் கறிச் சோறு
என்று கவிஞர் மனம் வருந்தி எழுதியுள்ளார். கவிஞரின் இரக்க சுபாவம் நமக்கு தெளிவாகத் தெரிகின்றது.
ஆசை அறுமின் ஆசையே அழிவிற்குக் காரணம் என்று ஊருக்கு உபதேசம் செய்கின்ற சாமியார்கள் பலர்
சகல வசதிகளுடன்
சாமியார் அருளுரை
ஆசையே அழிவிற்குக் காரணம்.
சாமியார்களைச் சாடியுள்ளார் கவிஞர் இதன் மூலம் அவர் வெறுப்புணர்ச்சியைக் கண்டு கொள்கிறோம்.
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை, போலியான ஆண்மிகவாதிகளின் உபதேசம், மூட நம்பிக்கை, இரக்கமின்மை, அறியாமை, தேசத் துரோகம்,மனித நேயமின்மை போன்றவற்றையெல்லாம் கவிஞர் வெறுத்து மனந் தாளாது வருந்திய தமது உள்ளத்துப் பாங்கினை ஹைக்கூக் கவிதைகள் வாயிலாக நாம் உணரும்படி எழுதியிருப்பது சிறப்பாகக் கண்டு கொள்கிறோம். இயற்கைச் சீற்றத்தினைக் கண்டு மனம் பொறுக்காததும் வருந்தி எழுதியிருக்கிறார்.
ஹைக்கூ தொகுப்புக்கள் 7 எழுதி இந்த தொகுப்பு 8 வது என்று அறிய வியப்பாகவும், அவரது தமிழறிவு கண்டு மலைப்பாகவும் உள்ளது.
தோன்றுத் துணையாகி நிழலாக
மீனாளின் அருள் என்றொன்றும்
உடன் வர நீவிர் இந்தத்
தமிழ் கூறும் நல்லுலகில் சிறப்பான
நல்லிடம் கொண்டிட்டீர்!
நாளும் சிறப்புக்கள் எல்லாம்
தேடி உங்களைச் சேரட்டும்!
என வாழ்த்தியே பெரும் மகிழ்வு கொள்ளுகின்றேன்.
இப்படிக்கு
கவிஞர்.லட்சுமி வாசுதேவன்
கருத்துகள்
கருத்துரையிடுக