உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை
கவிஞர் இரா.இரவி
ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால்
லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழர்களின்
உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு போனது
உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தான் ராஜபட்சே
ஈழத்தில் சிங்களனாகப் பிறந்து இருந்தால்
இந்தக் கொடுரக் கொலைகள் நடந்து இருக்காது
உலகத் தமிழர்களில் பலர் வேடிக்கைப்
பார்த்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை
கிராமத்தில் ரத்த சொந்தம் ஒருவர் இறந்தால்
குடும்பத்தில் பொங்கல் கொண்டாட மாட்டார்கள்
ஈழத்தில் ரத்த சொந்தம் லட்சத்திற்கும் மேல்
இறந்ததால் உணர்வாளர்களுக்கு செம்மொழிமாநாடு
இனிக்கவில்லை.
மகாகவி இன்று இருந்து இருந்தால்
செந்தமிழ் நாடு எனும் போதினிலே
துன்பக் கண்ணீர் வழியுது விழிகளிலே
என்றே பாடி இருப்பான் .
தமிழினம் வீழ்ந்து தமிழ் வாழ்ந்து என்ன பயன் ?
கருத்துகள்
கருத்துரையிடுக