கல்லூரி அதிசயங்கள் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

era.jpg
கல்லூரி அதிசயங்கள் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர் : முனைவர் கு.ஞானசம்பந்தன்

நூல் ஆசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அட்டைப்படம் அழகாக உள்ளது. தொல்லியல் அறிஞர், பேராசியர் தொ.பரமசிவன்,திரு. நாஞ்சில் நாடன் ஆகியோரின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. பட்டிமன்ற நடுவர், நகைச்சுவைப் பேச்சாளர், முனைவர் பட்ட நெறியாளர், திரைப்பட நடிகர் என பன்முக ஆற்றலார். பல்வேறு இதழ்களில் எழுதிய ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக நவரத்ன மாலையாக இந்நூல் உள்ளது. இந்நூல் ஆறிலிருந்து அறுபது வரை அனைவருக்கும் பிடிக்கும் இனிக்கும்.

கட்டுரைகளில் சில பேச்சு நடையிலேயே செல்வதால், வாசிக்க சுவையாக உள்ளது. நூலை கையில் எடுத்ததும், நூல் முழுவதும் வாசித்து விட்டுத்தான் வைக்க முடியும். ஆந்த அளவிற்கு படிக்க விறுவிறுப்பாக, மிக நல்ல நடையில் எழுதி உள்ளார். தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, � நாளும் நாளும் வாசிப்பால் மட்டுமே உயர முடியும்� என எப்போதும் எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் எங்களது ஞான ஆசிரியர், சிந்தனையாளர் தொ.ப.என்று அன்பாக அழைக்கப்பெறும் முனைவர் பேராசிரியர் தொ.பரமசிவன் என்று நூலாரிசிரியர் என்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகச்சிறந்த வாசகனால் தான் மிகச்சிறந்த எழுத்தாளராக முடியும் என்பதற்கு ஏற்ப நூலாசிரியர் முனைவர்.கு.ஞானசம்பந்தம் வாசிப்பை சுவாசிப்பதைப் போல நிகழ்த்துவதால் தான் அவரால் ஒரே நேரத்தில் பேச்சுக்கலை, எழுத்துக்கலை என இரண்டிலும் மிளிர முடிகின்றது. ஊடகங்களின் வருகையின் காரணமாக வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு.

�பார்த்ததும் இரசித்ததும்� கட்டுரை பட்டிமன்ற அனுபவத்தை பகிர்கின்றது. �தீபாவளி பல(hத்)காரங்கள் என்ற கட்டுரையின் தலைப்பே நசைச்சுவை தருகின்றது. �என்றென்றும் கமல்� என்ற கட்டுரையில் நண்பர் திரு.கமலஹாசன் பற்றி உண்மையை மட்டும் அழகாக பதிவு செய்துள்ளார். திரு.கமல் போல அறிமுகமான குழந்தை நட்சத்திரங்களான ஸ்ரீதர்,பிரபாகர், தசரன் போன்றவர்கள் பிற்காலத்தில் கதாநாயகர்களாக ஜொலிக்க முடியவில்லை. காரணம் திரு.கமல் நாடகக்குழு அனுபவம், நடனக் கலைஞர், உதவி இயக்குனர் பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகே கதாநாயகனாக அறிமுகமானதால் ஜொலிக்க முடிந்தது என்ற உண்மையை கட்டுரையில் அழகாக பதிவு செய்துள்ளார்.

மதுரைத் தலங்களும் தேவாரமும்� என்ற கட்டுரை திருஏடகம், திருவேடகம் ஆனது.திருப்பாச்சேத்தி போன்ற ஊர்களின் பெருமை கூறுகின்றது. நூலின் பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. �கல்லூரி அதிசயங்கள்� �குருவே துணை� என்பதை ஒரு மாணவன் �குரு வேதனை� என்று எழுதியிருந்தான் என்று தொடங்கிய நகைச்சுவை சரவெடியாக வெடிக்கின்றது கட்டுரை முழுவதும்.� தனிப்பாடல்களில் நகைச்சுவை� கட்டுரை தமிழ் இலக்கியத்தில் உள்ள தரமான நகைச்சுவைகளை எடுத்து இயம்புகின்றது. �வல்லமை தாராயோ� என்ற மகாகவியின் வைர வரிக்கான கட்டுரை தன்னம்பிக்கை விதை விதைக்கின்றது. உலகப் பொதுமறையான திருக்குறளின் மேன்மையை விளக்குகின்றது. �தமிழ் கற்போம் தரணியை வெல்ல� என்ற கட்டுரை இலண்டன் சிவயோகம் மலரில் இடம் பெற்று உலகப்புகழ் பெற்ற கட்டுரை இந்தக் கட்டுரையை நூலாசிரியர் அவர்களிடமிருந்து வாங்கி மலர் ஆசிரியர் நூலின் திரு.பொன்.பாலசுந்தரம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதை மறக்காமல் நூலின் என்னுரையில் குறிப்பிட்டு, மலர் ஆசிரியருக்கும் எனக்கும் நன்றியை பதிவு செய்துள்ளார். இந்த உயர்ந்த குணம் தான் அவரை உயர்ந்த இடத்திற்கு தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்கிறது.

தமிழ் படித்தால் என்ன பயன்? என்று கேட்கும் அனைவரும் படித்து அறிய வேண்டிய நூல் இது. இதழியல், மக்கள் தகவலியல், சுற்றுலாவியல், கோவில்;கலை, நாட்டுப்புறவியல், ஆட்சித்தமிழ், மேடைத்தமிழ், கணினித் தமிழ் என பல வகையான விரிந்த பரப்புகள் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் படித்தவர்கள், தமிழ் வழியாக படித்தவர்கள் பல்வேறு துறையில் எப்படி ஜொலிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் நூல்.

�மகிழ்ச்சிப் பயணம்� என்ற கட்டுரையில் ஆலயத்திற்கு சென்ற போது, பூட்டி இருந்த கதவை திறக்க அர்ச்சகர் வந்து விட்டார் என்று எதிர்பார்த்த போது, கொத்து சாவியோடு வந்தவரை பின்தொடர்ந்து வர அவர் சாவியை வைத்து வணங்கிவிட்டு செல்ல வந்த பலசரக்கு கடைக்காரர் என்பது நல்ல நகைச்சுவை. மொத்தத்தில் கவலையில் இருப்பவர்களுக்கு துன்பம் போக்கும் மருந்தாக நூல் உள்ளது. உவகைப் புலவர், கலைமாமணி,முனைவர் இப்படி பல்வேறு பட்டங்கள் பெற்ற போதும், தான் என்ற அகந்தை சிறிதும் இல்லாமல் எல்லோருடனும் அன்பாக பழகிடும் மிகச்சிறந்த மனிதர், மிகப்பெரிய நட்பு வட்டம் இவருக்கு உண்டு.

வள்ளுவருக்கு ஒரு வாசுகி போல,காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரிபாய் போல, பாரதிக்கு ஒரு செல்லம்மா போல, முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரு திருமதி. அமுதா அவர்கள் அமைந்ததால் தான் இவரால் இவ்வளவு சிறப்பாக எழுதவும், பேசவும், இயங்கவும் முடிகின்றது.

கருத்துகள்