சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்
சங்கத் தமிழைப் பாராட்டி மகிழ்கின்றது.
சாகித்ய அகதெமி விருது உங்களை கௌரவப்படுத்தவில்லை
சாகித்ய அகதெமி விருது உங்களால் கௌரவப்படுத்தப்பட்டது.
தமிழர்களைக் கண்டு கொள்ளாத சாகித்ய அகதெமியை
தமிழர்களின்பால் கவன ஈர்ப்பு செய்தவர் மேத்தா.
எப்;போதோ தரவேண்டிய இந்த விருதை
இப்போதாவது தந்து களங்கம் போக்கியது சாகித்ய அகதெமி.
நோபல் பரிசு பெறக்கூடிய தகுதியும், திறமையும்
ஓருங்கே அமையப் பெற்றவர் மேத்தா.
கண்ணீர் பூக்கள் கவிதை நூல் இல்லை என்றால் மேத்தா இல்லை
மேத்தாவின் துணைவியார் தங்க வளையல் தரவில்லை என்றால் கண்ணீர் பூக்கள் இல்லை.
புதுக்கவிதைகளின் தாத்தா எங்கள் மேத்தா
புதுக்கவிதைகளின் பாடப் புத்தகம் மேத்தா நூல்கள்
புதுக்கவிதை என்றால் என்னவென்று பலருக்கும்
புரியும்படி கவிதை எழுதியவர் மேத்தா
புதுக்கவிஞர்களுக்கான புதிய பாதையில் மலர் தூவி
புத்துணர்வூட்டி இளைஞர்களை வரவேற்றார் மேத்தா
வார்த்தை வித்தையால் வாசிப்பவரின் உள்ளத்தை
வாரி எடுக்கும் திறமை பெற்றவர் மேத்தா
உள்ளத்தில் உள்ளதை ஒருவருக்கும் அஞ்சாமல்
உரைக்கும் நெஞ்சுரம் மிக்கவர் மேத்தா
புதுக்கவிதை, கவிதையன்று: என்று சொன்ன அதிமேதாவிகள்
புரிந்திடும் வண்ணம் தலையில் கொட்டியவர் மேத்தா
புhரதிதாசனைப் போல புகழையும் அடைந்தார்
திரைப்படம் எடுத்து பணமும் இகழ்ந்தார் மேத்தா
நான்கு கவிதைகள் எழுதியதும் நான் தான் கவிஞன் என்று கூறும்
நவீன யுகத்தில் எண்ணிலடங்கா கவிதைகளை எழுதியவர் மேத்தா
கவியரங்கில் கவிதை பாடினால் அரங்கமே
கைதட்டலால் உண்மையிலேயே அதிர வைப்பவர் மேத்தா
செந்தமிழ்ச் சொற்களை நாவில் நடனமாட வைத்து
சுண்டி இழுத்து சொக்க வைப்பவர் மேத்தா
இலக்கணம் என்ற கைவிலங்கை
அடித்து நொறுங்கிய வேங்கை மேத்தா
தலைக்கணம் என்றால் என்னவென்றே அறியாத
தன்னடக்கத்தின் சின்னம் மேத்தா
கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்திற்லேயே
கவிதையில் வெற்றிக்கொடி கட்டியவர் மேத்தா
கருத்துகள்
கருத்துரையிடுக