படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

உலகெங்கும் பல்வேறு நாடுகளில், 204 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிவந்துள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், 205ஆம் திருவள்ளுவர் சிலையினைத் தென்கொரிய மண்ணில் திறந்து வைத்தார் இத்திறப்புவிழாவில், தென்கொரியாவின் இந்திய தூதரக அதிகாரி திருமதி சுரேஷ்குமார் அவர்கள் , சுங்சொங்புக்தோ பயோ சி.எஸ். மையத்தின் தலைவர். புரவலர் லியூ ஜெ ஹ்யொங் ,சுங்ஜூ மாகாண கல்வியாளர் கிம்தோக்யோ ,மேனாள் லண்டன் மேயர் திரு.அப்பு தாமோதரன், மருத்துவர் சொக்கலிங்கம், பேராசிரியர் உலகநாயகி பழனி, கொரியத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் அரவிந்த ராஜா, முனைவர் மோ.பாட்டழகன், துணைத்தலைவர் தெ.விஜயலட்சுமி, பொருளாளர் முனைவர் முத்துசாமி, இணைப் பொருளாளர் பீ.ஜெரோம், செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா, சக்கரா உணவகத்தின் உரிமையாளர் சாந்தி ஜேக்கப் அவர்கள் கனடா , ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இவ்விழாவில், ஆய்வரங்கம், கலையரங்கம், மரபு நடைப்பயணம் ஆகியவை இடம்பெற்றன. கொரிய தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இவ்விழாவினை நடத்தின

கருத்துகள்