படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
வணக்கம் ." பல்தசார் செழிப்பாக இருக்கும் போதே மோசமான நிலைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு தன்னை அறிவுறுத்துகிறார். ஓடிக் கொண்டே இருக்கும் நதி வற்றாமல் ஓடும் என்று நினைக்காமல் அதை மழைக் காலங்களில் குளமாகவும், ஏரியாகவும் சேமிப்பது அவசியம். அதைப் போலவே வர்த்தகம் உச்சத்தில் இருக்கும் போதே அது திசை திருப்பினால் என்ன செய்வது என்பதையும் யோசித்து அவற்றைச் சமாளிக்கத் திட்டமிட வேண்டும்.
சில நேரங்களில் நாம் நஷ்டப்பட்டதைக் கூட வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. ஜெயிக்கிற குதிரையின் மீதுதான் பணம் கட்ட எல்லோரும் வருவார்கள். தோல்வியுறுகிறோம் எனத் தெரிந்தால் நமக்குக் கடன் கொடுத்தவர்கள் கூட திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். சந்தையிலும் நம் பொருட்களை யாரும் வாங்கா முன்வர மாட்டார்கள்
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 339.இந்த நாள் உற்சாகமான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக