புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் இனியநண்பர் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் வாழ்த்து
என்தோழன் இரவி
வாழ்க! வாழ்க!!
அறிவில் தெளிவும்
ஆற்றலில் வீறும்
அகத்தில் கொண்ட என்தோழன்!
நெறியாய் வாழும்
நெஞ்சம் கொண்ட
நெருப்பு ஆனவன் என்தோழன்!
சிந்தனைக் கதிராய்
செந்தீ பரப்பிடும்
செந்தமிழ் வாணன் என்தோழன்!
எந்த பாவையும்
ஏற்ற மோடும்
என்றும் பாடுவான் என்தோழன்!
நலமுடன் வளமாய்
நாடு போற்ற
நாளும் வாழ்வான் என்தோழன்!
நிலம்மொழி இனத்தை
நன்றே காத்திடு
நெஞ்சம் கொண்டவன் என்தோழன்! பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்

கருத்துகள்
கருத்துரையிடுக