3.11.2025.எழுத்தாளர் ம.அரங்கநாதன் அவர்களின் பிறந்தாள் இன்று. அவரது நினைவாக அவர் எழுதிய ஒரு கதை பற்றி...
ம..அரங்கநாதனின் சிறுகதைகளில் ‘துக்கிரி’ என்ற கதையும் கட்டுடைப்பு வாசிப்பைக் கோரும் கதை. இந்தக் கதையில் முதன்மை அம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் கொள்ளலாம்:
-6 என்ற எண்
-பேயோட்டும் முத்துக்கறுப்பன்
-சீரழியும் நண்பன் பெருமாள்
இந்தக் கதையில் பேயோட்டும் பாத்திரமாக முத்துக்கறுப்பன் பாத்திரம் இருக்கிறது. சோதிடமும் தெரிந்துவைத்திருக்கிறது. நண்பன் பெருமாளுடைய சாதகத்தில் இருக்கும் குறைகள் பற்றி முத்துக்கறுப்பன் கூறியது நடந்ததால் தொடர்ந்து அதற்கான பரிகாரமாக மொட்டைப் போடுவது குறித்து தந்தை கூறியபடி மொட்டைப் போட்ட முத்துக்கறுப்பன் தலையில் ஆறு என்ற எண் போன்ற தடிப்பு இருக்கிறது.
ஆறு என்ற எண் பேயுடன் தொடர்புடையது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. மேலும் இது ஆங்கிலப் படங்களிலிருந்து உருவான நம்பிக்கையைப் போல் கதைக்குள் சில செய்திகள் உள்ளன. ஆறு என்ற எண் தலையிலிருந்த நண்பன் நாராயணனால் சீரழிந்த பெருமாளுக்கு உதவும் முத்துக்கறுப்பன் பாத்திரத்திற்கும் தலையில் ஆறு என்ற எண் இருக்கிறது.
ஆறு என்ற எண் பேயுடன் தொடர்புடையது என்றால் பரிகாரம் செய்வதே பேய்தான் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படைப் பொருள். ஆறு என்ற எண்ணைத் தலையில் கொண்ட நாராயணன் என்ற பாத்திரத்தின் குணாம்சங்கள் தீங்கை இயல்பாக விளைவித்தது போலத்தான் முத்துக்கறுப்பன் பாத்திரத்திற்கும் இருந்திருக்கவேண்டும். அல்லது பெருமாளுக்கு நடந்த சீரழிவெல்லாம் முத்துக்கறுப்பன் பாத்திரத்தின் தீங்கிழைக்கும் சாதகத்தால் கூட நடந்திருக்கலாம் என்ற பிறழ்வை இந்தக் கதை உருவாக்குகிறது.
#மஅரங்கநாதன்

கருத்துகள்
கருத்துரையிடுக