படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முத்தமிழ்க் காவலர் #கி_ஆ_பெ_விசுவநாதம்_அவர்கள் (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வங்கனூர் மோகனன் அவர்கள் தந்த அருமையான பதிவு ******************************************** கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். #நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் #பெரியாருடன் இணைந்து #இந்தி_எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இளமைக் காலம்: 1893-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் #பெரியண்ணப்_பிள்ளை #சுப்புலட்சுமி_அம்மையார் அவர்களுக்கு மகனாய் பிறந்தார். தமிழ் இலக்கணக் கடலான இவர் பள்ளிக்குச் சென்றதில்லை. ஐந்தாவது வயதில் #முத்துச்சாமிக்_கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் #வேங்கடசாமி_நாட்டார்_மறைமலையடிகள்_திரு_வி_க_நாவலர்_சோமசுந்தர_பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார். முதன்மை நிகழ்வுகள்: முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும், தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே #கி_ஆ_பெ_விசுவநாதம். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களைத் தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி. ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்குத் துணை நின்றார். விருதுகள்: 1956ஆம் ஆண்டு திசம்பர் 17ஆம் நாள் திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் "#முத்தமிழ்க்_காவலர்" என்னும் பட்டத்தை, அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் #டி_எம்_நாராயணசாமியால் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "#சித்த_மருத்துவ_சிகாமணி" விருது வழங்கப்பட்டது 1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "#வள்ளுவ_வேல்" என்னும் விருது வழங்கியது. பெருமைக்குரிய செய்திகள்: 2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் #தமிழ்நாடு_அரசின் #தமிழ்_வளர்ச்சித்_துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் #கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு #கி_ஆ_பெ.யின் பெயர் சூட்டப்பட்டது. இயற்றிய நூல்கள் 50க்கும் மேல் இருக்கும்.அவற்றுள் தமிழ் மருத்துவம் குறித்த நூல் மிகவும் சிறப்பானது. மறைவு: அகவை முதிர்வு காரணத்தால் இவர் 1994 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 19 அன்று காலமானார். தமிழ் உள்ளவரை கி.ஆ.பெ அவர்களின் புகழ் ஒளிவீசும். *- வங்கனூர் அ.மோகனன்* .

கருத்துகள்