கவிஞர் பால வேலாயுதம்

🌟மதிப்பிற்குரிய ஐயா கவிஞர் இரா.ரவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துமடல்✍️ இரத்தினச் சுருக்கமாய் பெயர் கொண்டு, வைரத்தினும் கூரிய வரிகளை, தாய்தமிழுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும், ஹக்கூ நாயகனே...! தமிழின்பால் நீர் கொண்ட காதலுக்கு, அந்நீரே உவமையாகும்! இலக்கியத்தில் பட்டபெயர்கள் பல நீர் பெற்றாலும், தெய்வதிரு.தந்தை அவர்கள் சூட்டிய பெயரே பெருமையென, எண்ணும், தங்கள் சிந்தனைக்கு ஏது ஈடு? என் போல் இளம்கவி எழுத எண்ணி பேனா எடுக்கையில், உம் க(விதை) காட்டி, விரல்பேனா பிடித்து, கற்பனை உரம் போட்டு, ஊக்கம் தரும் உங்கள் அணைப்பில் இருப்பதே எமக்கு பேராணந்தம்! நூறாண்டு கடந்து வாழ்க...! என வாழ்த்த வயதில்லை எனக்கு! நானுள்ள வரை, நம் தாய்தமிழின் புகழ் வளர்க்க, இன்று போல் என்றென்றும், இளமை குறையாத, வளமை குன்றாத, நீர் போல் நீர் வாழ இறைவனை வேண்டுகிறேன்...! ❣️மனமார்ந்த இனிய அகவைத்திருநாள் வாழ்த்துகள்🙏🏾 கவிஞர் பால வேலாயுதம்

கருத்துகள்