படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பேராசிரியர் கவிஞர் ஆதிரா முல்லை ! படைத்தவனுக்கு படைப்புகளால் ஒரு பாமாலை ************** கவிக்கோ,,,,,, முட்டை வாசிகளான எங்களுக்குக் முத்தமிழின் முகவரி நீ கடவுளின் முகவரியும் நீதான் உன் சுட்டுவிரல் பிடித்துக் கவிபடிக்கக் காத்திருந்த பித்தர்கள் நாங்கள் உன் தேவகானம் கேட்டே உறங்கும் அழகிகள் நாங்கள் உன்னை இழந்து தவிக்கும் எங்கள் மனங்களில் விதை போல் விழுந்தவன் நீ பசி எந்த சாதி என்று வினா எழுப்பினாய் பசி ரகசியப்பூவான உன்னைக் காக்கைச் சோறாக(று) விழுங்கிய காலனின் சாதி காலன்மீது நாங்கள் கொண்ட கோபத்தின் நெருப்பை அணைக்கும் நெருப்பு உன் ஆலாபனையில் மட்டுமே உண்டு எங்கள் கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை ஏனென்றால் நீ இல்லையிலும் இருக்கிறாய் பறவையின் பாதையை நீயே காட்டினாய் இது சிறகுகளின் நேரம் என்று பறந்து வந்தோம் அன்று பூக்காலம் அது முதல் ராத்திரியைப் போன்றே உன் கவிராத்திரி ஒவ்வொன்றும் எங்களுக்குப் புது ராத்திரி பாலைநிலாவில் கவிராத்திரி நடத்திக் கொண்டிருக்கும் உனக்கு மின்மினிகளால் ஒரு கடிதம் வரைகிறோம் ஏனென்றால் எங்களுக்குக் கவியின்பம் தர நிலவிலிருந்து வந்தவன் நீ தட்டாதெ திறந்து கிடக்கிறது என்றாய் தட்டிக் கொண்டே இருக்கிறோம் மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல,,,, நீ இறந்ததால் பிறந்தவன் பால்வீதி உன்னைத் திருப்பி அனுப்பட்டும் இது நேயர் விருப்பம்

கருத்துகள்