கிருத்திகா தரண்
ஒரே ஒரு ஆண் கூடவா இல்லை?
சினிமா பத்திரிக்கையாளர்களே?
ஆணுக்கு கொம்பு முளைத்த 'ஆ' வில் பெண்களை சீண்ட மட்டும் பயன்படுத்த போலும்!
அசிங்கப்படுத்த போலும்!
துணையாக ஒரு குரல் கூட ஒலிக்கவில்லையே?
ஏன் ?
மிக மிக அசிங்கமாய் இருக்கிறது தமிழ் ஆண் பத்திரிக்கையாளர்களை நினைக்கும் பொழுது. நீங்கள் எப்படி நாலாவது தூணாய் நிற்க போகிறீர்கள்? 'நாலாந்தரமாய்தான் நிற்பேன்' என குரல் கொடுத்து அதை நியாயமும் செய்வது மிக கூச்சமாய் இருக்கிறது.
கவுரி கிஷனின் பதில்கள் மிகத்தெளிவு. நான் இருந்திருந்தால் கண்ணிர் இல்லாமல் பேசி இருப்பது கடினம் அத்தனை அவமானப்படுத்துகிறார்கள். கூட்டமாய். திரும்ப திரும்ப புரியாமல் பேசுகிறார்கள்.
இவரிடம் கேட்காமல். அவர் பூசினாப்ல இருப்பதால் அவரின் வெயிட் என்னன்னு நக்கலாக கேட்கிறார். ஆம் என்கிறார்! முதலில் செக்சிசம் என்றால் என்ன? இவரின் மேல் ஏன் பத்திரிகையாளர் சங்கம் ஏன் கண்டித்து அறிக்கை கொடுக்கவில்லை?
இந்த கேள்விகள் தவிர்க்கப்படனும். இனிமேல் பெண் பத்திரிக்கையாளர்கள். இல்லையெனில் பத்திரிக்கை சந்திப்பு நிகழ்த்தவே கூடாது. ஆப்கன் அமைச்சரை சந்திக்க சென்ற கூட்டம் போல் இருக்கு. அதுக்கும் முதுகெலும்பு இல்லை. இவர்களுக்கும் இல்லை.
பெருமையாக இருக்கு கவுரி கிஷன்.
நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். You are not doing a favour!
இது செக்சிசம்!
ஒரு ஹீரோவிடம் என் உடலை பற்றி கேட்பது தவறுதான்!
என் கேரக்ட்ர் பற்றி கேளுங்க. ஒரு கேள்வி கூட அதைப்பற்றி இல்லையே? என்னோட எடை பற்றி கேட்பீங்க , பின் என்னவெல்லாம் கேட்பீங்கன்னு தெரியும்!
உங்களுக்கு எங்களின் ஹார்மோன் இஷ்யூஸ் பத்தி தெரியுமா?
என்ன அர்த்ததில் கேட்டீங்கன்னு தெரியும், எனக்கு தமிழ் தெரியும், இங்க படிச்சவதாம்!
ஒருத்தர் கூட எனக்கு ஆதரவா பேசல. இருந்தாலும் நான் பேசறேன், நான் பேசுவதை இடைமறிக்காம கேளுங்க!
நீங்க பேசினத நான் கேட்டுக்கிட்டேன். இப்போ பதிலை குறுக்க பேசாம கேளுங்க!
நீங்க செய்யறது எல்லாம் ஜர்னலிசம் இல்லை!
என்ன வச்சு கத்தறீங்க? Every women has different body type! அதுக்குன்னு ஜீரோ சைஸ்ல இருக்கனுமா?
நீங்க பாடி ஷேமிங் செய்தது தப்புதான்!
மன்னிப்பு கேட்க முடியாது! நீங்கதான் கேட்கனும்,
நான் குண்டா இருப்பேன், 80 கிலோ இருப்பேன். என் நடிப்பை பத்தி பேசுங்க!
Normalizing body shaming ஏன் ஆக்டரஸ் க்கு எப்பவும் நடக்குது .
இதெல்லாம் காமெடி இல்லை!
என் நடிப்பை, கேரக்டர் பற்றி பேசினீங்களா?
ஜீரோ கேள்விகள் என் படம் பற்றி..ஆனா எப்படி தூக்கினிங்கன்னு செக்சுவலைஸ் செய்யறீங்க? அடுத்து என்ன கேப்பீங்கம்னு தெரியும்!
கண்ணிர் வருது பார்க்கும் பொழுதே!
அவர் சண்டைக்கு ஆரம்பிக்கிறார், ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் பொருத்தமாய் இல்லையே! அதாவது பூசி மொழுகின மாதிரி இருக்கீங்க, குஷ்பூ,சரிதா போல இருக்கீங்க அதனால வெயிட் என்னன்னு கேட்டேன், நா என்ன மோடி பற்றியும், டிரம்ப் பற்றியுமா கேட்க முடியும்! தமிழ் ரசிகர்களை பிரதிபலிக்கும் கேள்விகளைதானே கேட்க முடியும்?
என்ன திமிர். (டா) உங்களுக்கு ?
வெயிட்டை குறைக்கறேன்னு பதில் சொல்லனுமாம். மரியாதைன்னு ஒன்று இருக்கா? உங்க மரியாதை ச்சேய்.
அடச்சேய்! பத்திரிகையாளர்களே!
கிருத்திகா தரண்

கருத்துகள்
கருத்துரையிடுக