படித்ததில்...* கவிஞர் சாமிதிராவிடமணி
🌸🌸🌸🌸🌸🌸
"முதுமை என்பது இன்று உடல்நிலை அல்ல. மனநிலை. எத்தனையோ முதியவர்கள் உற்சாகத்தோடு இருப்பதையும், தொடர்ந்து இயங்குவதையும் பார்க்கிறோம். அவர்கள் இயங்குகிற காரணத்தால்தான் துடிப்போடு செயல்படுகிறார்கள். பரபரப்பாக இருப்பதால்தான் அவர்கள் நோய்வாய்ப்படாமல், நொடித்துப்போகாமல் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். முதுமை என்பது நம் நினைப்பில்தான் இருக்கிறது. வயதாகிவிட்டது என்று நினைக்காமல் வழக்கம்போல் இயங்கத்தொடங்கினால், முதுமையின் சுவடுகள் நம் முகத்திலும் விழுவது இல்லை. முதுகெலும்பிலும் விழுவது இல்லை".
*"இறையன்பு ஓராண்டு உரைகள்"* என்ற நூலின் முதல் தொகுதியிலிருந்து..

கருத்துகள்
கருத்துரையிடுக