மதுரை இலட்சியம் சிதம்பரம் . ( தேசிய நல்லிணக்கக் கவிஞர்-பாடகர் ) 🙏🏻💐🌹🍒🌷🍇🙏🏻

12.11.2025. 🙏🏻இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " ஹைக்கூ பெருங்கவி " இரா.இரவி அவர்களுக்கு !! 💐 ---- 💐🍒🌹🌷 --- மனித நேயத்தை என்றும் உயர்த்தி .. மனிதனை , மனிதனாய் தினமும் போற்றி .. மனித மாண்புகள் வளர்த்திடும் நல்ல .. மண்ணகம் சிறக்கவே உழைக்கும் கவி !! .. மகிழ்நிறை உணர்வுடன் நல்லதை மட்டுமே .. மனத்துடன் செய்து , பைந்தமிழ் பண்பினை .. மண்ணெலாம் தனது " ஹைக்கூ கவிதைகளாலே " .. மதுரை தமிழையும் , முத்தமிழ் அழகையும் .. முகநூல் மூலம் " முத்திரை " பதித்து - தன் .. முகத்தினை மலர்ச்சியாய் காட்டிடும் பெருங்கவி !! 🌹 எழுச்சியை ஊட்டிடும் மாகவி பாரதியாய் ( ! ) .. எதற்கும் தயங்காத பாரதி தாசனாய் ( ! ) .. எவரும் ஏற்றிடும் இருவரி வள்ளுவனாய் .. எங்கும் நிறைந்திட்ட மரபுக் கவிதையாக (வும் ! ) .. எல்லா சாதி , எல்லா மதத்தவரும் .. என்றும் ஏற்றிடும் ஹைக்கூ இரா.இரவி !! மரபையும் சொல்லி , ' ஹைக்கூ ' வையும் உயர்த்தி .. மண்ணுலகு வியக்க , சமூக விழிப்புணர்வாய் .. மக்கள் மனத்தில் மதிப்புறு கவிஞராய் - வாழும் .. " மனித மாமணி " இரவி அவர்களின் பிறந்தநாளில் .. மண்ணெலாம் , இன்னும் வியக்க , உயர்ந்து .. இனிக்கும் நூறாண்டு கடந்தும் பைந்தமிழின் .. இயலாய் , இசையாய் வாழ்க ! வாழ்கவென .. இலட்சியம் சிதம்பரம் , இதய நிறைவுடன் .. இனிய தமிழக இல்லம் குடும்பதத்தினருடன் .. இணைந்து , வாழ்க ! வெல்கவென வாழ்த்துகிறேன் !! 🙏🏻 -- இன்பமிகு தமிழாய் உலகெலாம் வலம் வர வாழ்த்தி , மதுரை இலட்சியம் சிதம்பரம் . ( தேசிய நல்லிணக்கக் கவிஞர்-பாடகர் ) 🙏🏻💐🌹🍒🌷🍇🙏🏻

கருத்துகள்