படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
இனிய வணக்கம் ." பல்வகை முதலீடு(Diversification ) என்பது மிகவும் முக்கியமான வர்த்தக நுட்பம். எல்லாப் பணத்தையும் ஒரே தொழிலில் முதலீடு செய்வதும், முடக்குவதும் ஒரே மாதிரிதான். அந்தத் தொழில் எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்தால் ஏமாற்றமும், நஷ்டமும் ஏற்பட்டு நொடிந்து போக நேரிடும். பேருந்தில் பயணம் செய்கிறபோது கூட எல்லாப் பணத்தையும் ஒரே சட்டைப் பையில் வைக்காமல் நான்கு சட்டைப் பைகளில் வைப்பது நல்லது.
அப்போதுதான் ஒரு பையில் இருப்பதை யாராவது களவாடினாலும் நாம் கையேந்தாமல் காப்பாற்றப்படுவோம்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 343.இந்த நாள் உற்சாகமான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக