படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வணக்கம் ." ஒரு நல்ல தலைமை அந்தக் குழுவில் எல்லா உறுப்பினர்களையும் ஒரே திசையை நோக்கிப் பார்க்க வைக்கும் ஆற்றல் உள்ளது. ஆண்டனியோ டி எக்ஸிப்பரே என்பவர் காதலைப் பற்றிக் கூறும்போது " அது இருவர் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதல்ல. ஒரே திசையில் பார்ப்பது." என்று குறிப்பிடுவார். அதைப்போல குழுவில் இருப்பவர்களை ஒரே நோக்கத்தை எண்ணிச் செயல்பட வைப்பது தலைமைப் பண்பின் குறிக்கோள். நெருக்கடிகள் வரும் போதுதான் எது சிறந்த தலைமை என்பதை உணர முடியும். சமயோசித புத்தி, சாதுர்யம், துணிவு, தன்னம்பிக்கை ஆகியவை இருக்கிற போதுதான் அந்த சூழலை அவர்கள் அடைய முடியும். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 348.இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கருத்துகள்