வழக்கறிஞர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் ( காவல்துறை கண்காணிப்பாளர் பணி நிறைவு ) அவர்களின் வாழ்த்து
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சங்கம் கண்ட மதுரை தமிழுக்கு பல தமிழறிஞர்களைத் தந்திருந்தாலும்
இருபதாம் நூற்றாண்டு தந்த தமிழ்ச் செம்மல் ஹைகூ கவிஞர் இரா.இரவி தனித்துவமானவர்.
கல்லூரியில் படிக்கவில்லை.
பல்கலைக் கழகத்துப் பாடத்தில் இவரது கவிதைகள்.
தமிழுக்காகவே வாழ்பவர்.
நடமாடும் தமிழ் இலக்கிய தகவல் பெட்டகம்.
அமைதியாய் கொள்கையோடு தமிழ் வளர்ப்பவர்.
ஆர்ப்பாட்டம், தேவையற்ற விளம்பரம் எதுவும் கிடையாது.
இரண்டு மூன்று கவிதைகள் வெளிவந்தால் ஏ நான் கவிஞர் , கவிஞர் என்று பிளக்ஸ் ஃபோர்டு வைக்கும் காலத்தில் 35க்கும் மேற்பட்ட கவிதை நூல் படைத்திட்டவர்.
எங்கள் மதுரை உலகத் திருக்குறள் பேரவை, பாவேந்தர் பேரவை போன்ற எண்ணற்ற அமைப்புகளை தன் பொறுப்புகளால் அலங்கரிப்பவர்.
தமிழ் செம்மல் விருது உட்பட பல விருதுகள் பெற்ற பணி நிறைவு மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி.
என்னை விட அகவையிலும் மூத்தவர்.
பல்லாண்டு வாழ்க.

கருத்துகள்
கருத்துரையிடுக