வணக்கம் ." மைக்கேல் ஆம்ஸ்ட்ராங் தலைவர்களுக்கு இரண்டு பணிகள் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். முதலாவது அவர்கள் எடுத்துக் கொண்ட பணியைச் செவ்வனே முடிக்க வேண்டும். அடுத்ததாக குழுவில் இருப்பவர்களோடு இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கூறும் குணங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவள் மாக்ஸிம் கார்க்கி படைத்த தாய். இரஷ்யாவில் புரட்சிகரமான காலகட்டத்தில் வரலாற்றுத் திருப்புமுனையாகக் கருதப்பட்ட அந்த நாவலை லெனின் வெகுவாகச் சிலாகித்திருக்கிறார். பேவல் என்கிற பதின்ம வயதுப் பையன் தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு தொழிற்சாலை ஒன்றில் பணியில் சேருகிறான். அவன் தாய் நிலோனா, மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவனோடு இருபது ஆண்டுகள் பரிதாபமாக வாழ்ந்தவள்.
தலைமைப் பண்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கியம் கூறும் உதாரணம் நிலோனா.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 349& 350.இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக