வாசித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி
புத்தகம் வாசித்தால் ஆயுள் கூடும்...!
நாளிதழ், புத்தகம் வாசிக்கும் போது, மூளையின் பின் பகுதி நரம்புகள் தூண்டப்படும்.
இந்தப் பகுதியில் தான் நினைவுகளின் தொகுப்புகள் இருக்கும்.
வாசிப்பு அதிகரிக்கும் போது, நிறைய விசயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
இதனால் மூளையின் பின் பகுதி நரம்புகள் அதிகமாகத் தூண்டப்படும்.
இதனால் கூடுதல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
ஞாபக சக்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
கவனம் கூர்மையாகும். நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும்.
வாசிப்புப் பழக்கம் தான் மூளைக்கான பயிற்சியாக அமையும்.
வாசிப்பதால் மன அழுத்தம் குறையும்.
மிகச்சிறந்த ஒரு புத்தகத்தால், ஒருவரின் கவனச் சிதறல் பிரச்சனையை சரி செய்ய முடியும்.
தூக்கம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.
குறுகிய எண்ணங்கள் மற்றும் தவறான சிந்தனையிலிருந்து, ஒருவரால் விடுபட முடியும்.
முதியவர்கள் வாசிப்பைப் பழக்கப்படுத்திக் கொண்டால், மூளை தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.
அதுபோல, இளம் வயதில் வாசிப்பு அதிகமாக இருந்தால் வயதான பிறகு ஞாபக மறதி தொடர்பான பிரச்னைகள் 32 சதவீதம் தடுக்கப்படும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பகிர்வு

கருத்துகள்
கருத்துரையிடுக