படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இயக்குநர் ராஜூ முருகன் பதில் நன்றி: விகடன்.

வட்டியும் முதலும்' புத்தகத்தில் நிறைய பேருடைய கதைகளை நீங்கள் எழுதி இருந்தீர்கள். அப்படி நீங்கள் சந்தித்த interestingஆன ஒரு நபர் என்றால் யாரைச் சொல்வீர்கள்? ``எல்லோருக்குமே சொல்வதற்கென்று ஒரு கதை இருக்கிறது. நீங்கள் ஒரு எழுத்தாளராக மாறினால் 82 வாரத்திற்கு மேலாக ஒரு தொடரை எழுத முடியும்' ஆனால், தற்போது சாதித்தவர்களுடைய கதையைத்தான் பேச வேண்டும் என்ற ஒரு பிம்பத்தை நாம் கட்டமைத்து வைத்துள்ளோம். அதன் விளைவு, எல்லோரும் சிறு குழந்தைகளிடம்கூட, `வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். சாதிக்க வேண்டும்' என்று தொடர்ந்து அழுத்தத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். என்னுடைய கேள்வி, `ஏன் சாதிக்க வேண்டும்?' என்பதுதான். சக மனிதர்களை ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஏன் அழுத்தம் கொடுக்கிறோம் என்று எனக்ந்த் தெரியவில்லை. மனிதன் என்பவன் வாழ்க்கையை வாழ வேண்டும். வாழ்வதுதான் முக்கியமே தவிர, சாதிக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கை நமக்கு அழகான ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறது. அந்த வாழ்க்கையின் அழகான தருணங்களை நாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். நம் பிள்ளைகளை அதற்குத்தான் பழக்கப்படுத்த வேண்டுமே தவிர, ஜெயிக்க வேண்டும் என்ற பிரஷருக்கு ஆளாக்கக் கூடாது. அதைத்தான் வட்டியும் முதலும் நூலில் முக்கியமாக தெளிவுபடுத்தி இருந்தேன். நமக்கு தெரியாத மனிதர்களிடம் அற்புதமான கதைகள் இருக்கின்றன. சாமானியர்கள் ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.'' -இயக்குநர் ராஜூ முருகன் பதில் நன்றி: விகடன்.

கருத்துகள்