படித்து நெகிழ்ந்தது ! கவிஞர் இரா .இரவி !

நெல்லை சு .முத்து நாளை விடியும் இதழ் தொடங்கப்பட்டு அப்போது ஒரிரு ஆண்டுகள் ஆகியிருக்கும். ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றபோது, வழக்கம்போல எல்லோருக்கும் துண்டறிக்கைகளையும் சிறு வெளியீடுகளையும் கொடுத்தபோது இவருக்கும் கொடுத்தேன். துண்டறிக்கையில் இடம் பெற்றிருந்த நாளை விடியும் இதழ் பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு, ஆண்டுச் சந்தா எவ்வளவு என என்னிடம் இவர் கேட்க, ரூ. 25 எனச் சொன்னேன். ஓராண்டுக் கட்டணம் கொடுத்தார். மே 2005 "தன்னம்பிக்கை" மாத இதழை இன்று தற்செயலாகப் புரட்டிக் கொண்டிருந்தபோது, இவரின் நேர்காணல் கண்ணில் பட்டது. அதில் இவர் குறிப்பிட்டு இருந்த செய்தி ஒன்று... "என் தந்தையார் பகுத்தறிவுக் கருத்துகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் என் உள்ளத்திலும் பகுத்தறிவுக் கருத்துகள் நிலை பெற்றன. ஊர் நூலகத்திற்கு அடிக்கடி சென்று வந்தேன். நிறைய நூல்களைப் படிக்கிற வாய்ப்பு ஏற்பட்டது" நேற்று இவர் மறைவெய்தி விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்திய விண்வெளித் துறையில் பணியாற்றிய அறிவியல் எழுத்தாளர் தோழர் நெல்லை சு. முத்து மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! அரசெழிலன்

கருத்துகள்