எழுதுங்கள்! எழுதுகிறேன்! எழுதுவோம்! என்றும் அன்புடன் பொன். குமார் 21 /15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு சேலம் 636006 9003344742
அன்புள்ளங்களுக்கு வணக்கம்.
கவிஞர் இரா. இரவி ஹைக்கூ மூலமே அறிமுகம். 1990களில் இதழ்களில் ஹைக்கூ எழுதிக்கொண்டிருந்த காலம். கவிஞர் இரா. இரவியும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருந்தார். ஹைக்கூவிற்கு இதழ்களும் வாய்ப்பளித்தன. ஜப்பானே ஹைக்கூவிற்கு மூலம் என்றாலும் தமிழக ஹைக்கூவிற்கு என்னும் அடையாளத்துடனே எழுதப்பட்டு வந்தது. ஹைக்கூவிற்கு என்று ஓர் இயக்கமே செயல்பட்டது. மூத்தவர்கள் பலர் இருந்தாலும் இளைஞர்கள் ஏராளமாக எழுதி வந்தனர். அவர்களில் ஒருவரே கவிஞர் இரா. இரவி. கவிஞரின் ஹைக்கூக்கள் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகமெங்கும் வாசகர்களால் வாசிக்கப்படுகிறது. ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இரா. இரவி என்றாலே ஹைக்கூ நினைவிற்கு வரும் அளவிற்கு அவரின் ஹைக்கூ பங்களிப்புகள் உள்ளன. கவிஞர் இரா. இரவியைத் தவிர்த்து தமிழக ஹைக்கூ வரலாறு எழுத முடியாது. கவிஞர் இரா. இரவி எழுதிய தொகுப்புகள் விவரம்
1997 கவிதைச் சாரல் ( கவிதைகள்)
1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்)
2003 விழிகளில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2004 உள்ளத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2005 என்னவள் ( காதல் கவிதைகள்)
2005 நெஞ்சத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2007 கவிதை அல்ல விதை ( கவிதைகள்)
2007 இதயத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2010 மனதில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2010 ஹைக்கூ ஆற்றுப் படை ( கட்டுரைகள்)
2011 சுட்டும் விழி ( ஹைக்கூக்கள்)
2014 ஆயிரம் ஹைக்கூ (ஹைக்கூக்கள்)
2014 கவியமுதம் ( கவிதைகள்)
2014 புத்தகம் போற்றுதும் ( கட்டுரைகள்)
2015 ஹைக்கூ முதற்றே உலகு ( ஹைக்கூக்கள்)
2017 ஹைக்கூ உலா (ஹைக்கூக்கள்)
2018 கவிச்சுவை ( கவிதைகள்)
2018 ஹைக்கூ 500 ( ஹைக்கூக்கள்)
2020 உதிராப் பூக்கள் ( தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள்)
2021 தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ - இந்தி மொழிபெயர்ப்பு முனைவர் மரிய தெரசா
2022 தீண்டாதே தீயவை ( )
2022 இளங்குமரனார் களஞ்சியம் ( கட்டுரைகள்)
2022. அம்மா அப்பா ( கவிதைகள்)
2023 ஹைக்கூ விருந்து ( ஹைக்கூக்கள்)
2023 இளமை இனிமை புதுமை ( காதல் கவிதைகள்)
2023 தமிழ் எங்கள் உயிருக்கு மேல் (கட்டுரைகள்)
2023 கட்டுரைக் களஞ்சியம் ( கட்டுரைகள்)
மேற்படி தொகுப்புகளில் கவிஞர் இரா. இரவி எழுதிய ஹைக்கூ நூல்கள் விவரம்
1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்)
2003 விழிகளில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2004 உள்ளத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2005 நெஞ்சத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2007 இதயத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2010 மனதில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்)
2011 சுட்டும் விழி ( ஹைக்கூக்கள்)
2014 ஆயிரம் ஹைக்கூ (ஹைக்கூக்கள்)
2015 ஹைக்கூ முதற்றே உலகு ( ஹைக்கூக்கள்)
2017 ஹைக்கூ உலா (ஹைக்கூக்கள்)
2020 உதிராப் பூக்கள் ( தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள்)
2021தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ - இந்தி மொழிபெயர்ப்பு முனைவர் மரிய தெரசா
2023 ஹைக்கூ விருந்து ( ஹைக்கூக்கள்)
2010 ஹைக்கூ ஆற்றுப்படை ( விமர்சனங்கள்)
கவிஞர் இரா. இரவியின் மேற்படி ஹைக்கூத் தொகுப்புகளில் தமிழிலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூ தொகுப்பு தவிர மற்ற தொகுப்புகளுக்கு விமர்சனங்கள் எழுதியுள்ளேன். ஹைக்கூ ஆற்றுப்படை என்னும் விமர்சனத் தொகுப்பிற்கும் ஒரு விமர்சனம் எழுதி அவரின் விமர்சனப் பார்வையையும் தெரிவித்துள்ளேன். மேலும் பல விமர்சனங்கள் ஹைக்கூ தொகுப்பு குறித்து எழுதியுள்ளார்.
கவிஞர் க. அம்சப்ரியா அவரின் அனைத்து தொகுப்புகளுக்கும் விமர்சனங்கள் எழுதுங்கள், தொகுப்பாகக் கொண்டு வரலாம் என்றார். காலம் கடந்து கொண்டே இருக்கிறது. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் தன் படைப்புகள் குறித்து எழுதக் கோரினார். காலம் கடந்து கொண்டே இருக்கிறது. எழுத்தாளர் உமையவனின் சிறுவர் கதைகள் தொகுப்புகளை வைத்து ஒரு விமர்சனத் தொகுப்பு கொண்டு வரலாம் என தெரிவித்ததன் அடிப்படையில் உமையவன் சிறார் படைப்பிலக்கியம் என்னும் தொகுப்பு சாத்தியமாயிற்று. கவிஞர் ஆரிசனும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் தொகுப்புகளை முன் வைத்து எழுதப்பட்ட விமர்சனங்கள் அடங்கிய கவிஞர் ஆரிசனின் கவிதை உலகம் என்னும் தொகுப்பு வெளிவந்தது. இவை தொடர்பாக கவிஞர் இரா. இரவியிடம் உரையாடிய போது அனைத்து தொகுப்புகளுக்குமான அதாவது ஹைக்கூ, கவிதை, கட்டுரை தொகுப்புகளுக்குமான விமர்சனங்களை எழுதுங்கள் கொண்டு வரலாம் என்றார். முதலில் ஹைக்கூக்களுக்கு மட்டும் கொண்டு வரலாம் என்றதற்கு ஒப்புக்கொண்டதன் விளைவாக உருவாயிற்று கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம் என்னும் இத் தொகுப்பு.
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம் மக்களுக்கானது. மக்களைப் பற்றியது. மக்கள் வாசிக்க வேண்டியது. கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள் இத்தொகுப்பில் உள்ளன. ஹைக்கூ என்பது இரா. இரவிக்கு உயிர். அவர் விடும் மூச்சு போல ஹைக்கூவும் அவரிடமிருந்து வெளிவந்து கொண்டேயிருக்கிறது. அவர் பேசினாலும் ஹைக்கூவாகவே வரும். விருதுகள் மட்டுமல்ல விமர்சனங்கள் கடுமையாக வைத்த போதும் இரா. இரவி ஹைக்கூ எழுதுவதில்லை நிறுத்தவில்லை. கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம் அறிய அவசியம் வாசியுங்கள்.
கவிஞர் இரா. இரவியிடம் ஹைக்கூக்ள் குறித்தும் அவரின் இலக்கியப் பயணம் குறித்தும் நிகழ்த்திய ஒரு விரிவான ஒரு நேர்காணலும் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம் என்னும் இத்தொகுப்பிற்கு தொகுப்புகளை அனுப்பி விமர்சனங்களை எழுத வாய்ப்பளித்த கவிஞர் இரா. இரவி அவர்களுக்கும் கவிஞர் இரா. இரவியின் தொகுப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் வானதி பதிப்பகமே இத்தொகுப்பை கொண்டு வருவதற்கும் மற்றும் வழக்கம் போல் ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ பயணத்தில் நிச்சயம் ஒரு கிலோ மீட்டர் கல்லாக அமையும். வாசிப்பதுடன் இருந்து விடவேண்டாம்.
எழுதுங்கள்!
எழுதுகிறேன்!
எழுதுவோம்!
என்றும் அன்புடன்
பொன். குமார்
21 /15 புதிய திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன்மேடு சேலம் 636006 9003344742
கருத்துகள்
கருத்துரையிடுக