அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி

அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி பெரியாரோடு கருத்து வேறுபாடு இருந்தபோதும் பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா ! பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும் பொடி வைத்துப் பேசும் பழக்கமற்றவர் அறிஞர் அண்ணா ! நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர் நல்லவர் சிறந்த பண்பாளர் அறிஞர் அண்ணா ! அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்ன அறிவு நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா ! கன்னிமாரா நூலகத்திற்கு வரும் நூல்களை கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட அறிஞர் அண்ணா ! ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் ஆங்கிலப் புலமையும் மிக்கவர் அறிஞர் அண்ணா ! எழுத்து பேச்சு இரண்டிலும் முத்திரைப் பதித்தவர் எழுத்து வாழ்க்கை வேறுபாடு இல்லாதவர் அறிஞர் அண்ணா ! கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர் கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர் அறிஞர் அண்ணா ! பொன்மொழிகள் யாவும் பொன்னான மொழிகள் பொன் போல ஒளிர்ந்திட மொழிந்தவர் அறிஞர் அண்ணா ! அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்திட அடித்தளம் அமைத்துத் தந்தவர் அறிஞர் அண்ணா ! மோனையும் எதுகையும் கலந்து முழங்கியவர் முத்திரைப் பேச்சால் முத்திரை வாங்கியவர் அறிஞர் அண்ணா ! அடுக்குமொழியில் அள்ளி வீசி கேட்போருக்கு அழகு தமிழில் செவி விருந்து தந்தவர் அறிஞர் அண்ணா ! ஓர் இரவு நாடகத்தை ஓர் இரவில் முடித்தார் ஓர் முடிவு எடுத்தால் முடித்திடுவார் அறிஞர் அண்ணா ! கதை நாடகம் கட்டுரை என்று வடித்து கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா ! இலட்சியத்தில் கூட நியாயம் வேண்டும் என்பார் இலட்சியம் நியாயமற்றதைவேண்டாமென்பார் அறிஞர் அண்ணா ! அவரச முடிவு ஆபத்தில் முடியும் என்பார் அமர்ந்து யோசித்து முடிவெடுப்பார் அறிஞர் அண்ணா ! மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக நின்றவர் மதுவை அடியோடு வெறுத்தவர் அறிஞர் அண்ணா ! மதுவை ஒழித்தால் நாடு செழிக்கும் உரைத்தார் மதுவை ஒழித்திட திட்டமிட்டவர் அறிஞர் அண்ணா ! உயரத்தில் குள்ளமாக இருந்திட்ட போதும் உள்ளத்தால் மிகவும் உயர்ந்தவர் அறிஞர் அண்ணா ! ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா ! அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! .பேரறிஞர் அண்ணா ! கவிஞர் இரா. இரவி, மதுரை ! பேரறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர் பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர் பெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர் பெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர் பெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர் கருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர் கருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர் அழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் அற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர் கடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர் காஞ்சியில் பிறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர் கஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர் குற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர் குன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர் கட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர் கட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர் அடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர் அனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர் உருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர் ஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா உலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா பகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர் பண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர் பத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர் பேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர் மூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர் மாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர் எதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர் எதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர் சொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர் சொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர் தமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர் தமிழ் மொழிக்கு அரியணை தந்து உயர்த்தியவர் தமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர் தமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர் பெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர் பெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர் மெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா மெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா

கருத்துகள்