படித்து நெகிழ்ந்தது.கவிஞர் இரா.இரவி. இன்றைய சிந்தனை *🌿🌼🌸 மதிப்பு மிக்க, மிகச்சிறந்த "அணிகலன்" எவை?*

படித்து நெகிழ்ந்தது.கவிஞர் இரா.இரவி. இன்றைய சிந்தனை *🌿🌼🌸 மதிப்பு மிக்க, மிகச்சிறந்த "அணிகலன்" எவை?* *༺🌷༻* இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிரதம மந்திரியின் ஆலோசகராக இருந்தபோது ஒரு நாள் இராமேஸ்வரத்திற்கு வந்தவர் தனது கண் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்தார். தனது சொந்த அலுவல் என்பதற்காக அவரது பாதுகாவலர்கள் எவரையும் அழைத்து வரவில்லை. சிகிச்சைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் தேவைப்பட்டது. கலாமிடம் முன்னூறு ரூபாய் மட்டுமே இருந்தது. மீதத்திற்கு காசோலை தருவதாகக் கூறினார். அதற்கு "காசோலையை நாங்கள் ஏற்பதில்லை, பணமில்லையென்றால் இலவச சிகிச்சை செய்து கொள்ளுங்கள்'' என்றனர். *༺🌷༻* அப்பொழுதும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு இலவச பிரிவிற்குச் சென்று சிகிச்சை பெற்று அவர்களின் ஆலோசனைப்படி ஒரு நாள் அங்கேயே தங்கினார். இரவாகியும் கலாம் அவர்கள் இராமேஸ்வரம் திரும்பவில்லை என்பதை அறிந்த பாதுகாவலர்கள் மதுரை விரைந்தனர். அங்கு அரவிந்த் மகரயாழ் கண் மருத்துவமனையில் ஏழை மக்களோடு, ஓர் அலுமினியத் தட்டில் வரிசையில் நின்று உணவைப் பெற்று உண்டுவிட்டு, ஒரு சிறிய பாயில் கலாம் அவர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தனர். *༺🌷༻* இதனையறிந்ததும், இலவச சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததற்காக மருத்துவர்கள் மன்னிப்பு கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், ""நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே! இலவச பிரிவில் எனக்கு சிறப்பான சிகிச்சை அளித்தீர்கள், கனிவுடன் கவனித்தீர்கள். மேலும், ஏழை எளிய மக்களுக்கு ஆத்மார்த்தமாக சிகிச்சை அளிக்கும் ஓர் உன்னதமான இடத்தை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது'' என்றார் கலாம். *༺🌷༻* உயர்ந்த பதவியில் இருந்தும், இக்கட்டான சூழலிலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, தன்னை இந்த மண்ணில் ஒரு *சராசரி மனிதனாகவே அடையாளம் காட்டிக்கொண்ட பணிவுதான் அவரை குடியரசுத் தலைவராக்கியது.* *༺🌷༻* "உண்மையில் ஒரு சிறந்த மனிதனை எடைபோடுவதற்கு அவனுடைய பணிவினை எடைபோட்டு பார்த்தால் போதும்'' என்கிறார் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் ஜான் ரஸ்கின். *༺🌷༻* *பணிவுடையன் இன்சொலன் ஆதல் /ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற* என்ற திருக்குறள் மூலம் *🌻"இனிமையாக பேசும் குணமும், பணிவும் ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள்'* என்கிறார் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர். பகிர்வு.ப/பி நல்ல எண்ணங்கள், செயல்களுடன் இணைந்த சமுதாய அக்கறையுடன் வாழ்வதென்பது மிகப் பெரிய உன்னதமான விஷயம். அத்தகைய இயல்புடையோர் நம் வாழ்வின் வரம். வாழ்க நலமுடன். இனிய காலை வணக்கம்.

கருத்துகள்