படித்ததில் பிடித்தவை ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தவை ! கவிஞர் இரா .இரவி ! தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏 14.01.2022இன்று உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் (ம ) தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🙏🙏 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு -திருவள்ளுவர் உலக மொழிகள் எல்லாம் அகர வரிசையில் பிறப்பது போல, உலக உயிர்கள் அனைத்தும் ஆதி பகவன் என்னும் கதிரவனால் (சூரியன் ) இறைவனால் தோன்றுகின்றன. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்ற எல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் தலை -திருவள்ளுவர் பூமியை உழுது விதைத்து அறுவடை செய்து உலகத்திற்கு உணவு இடுகின்ற உழவன் (விவசாயி ) தான் பெரியவன். உலக மக்கள் அனைவரும் அவர் பின்னால் செல்வது சிறப்பு. -திருக்குறள் 50, 000 ஆண்டுகளுக்கு மூத்த மொழி தமிழ் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அமெரிக்காவின் அலெக்ஸ்கோழியோ என்னும் பேராசிரியர் உலகில் முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்கின்றார். ஜப்பானிய தொல்லியல் அறிஞர் சுசுமுகனோ 2000, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாட்டில் வேளாண்மை செய்வது எப்படி என்பதை கற்று கொடுக்க, தெற்கு ஆசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்த, நாகர்கள், எனும் தமிழர்கள் கற்றுக்கொடுக்க எங்கள் நாட்டிற்கு வந்தார்கள். அப்போது அவர்களிடம் உள்ள வேர் சொற்கள், கலைச்சொற்கள் உயிர்ச்சொற்களை எடுத்து எங்களுடைய ஜப்பானிய மொழியை உருவாக்கினோம். என்கின்றார். எனவே ! உலகின் மூத்த மொழி தமிழ். மூத்த இனம் தமிழினம். உலகத்திலே !நம்மை படைத்த பூமிக்கும் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து படையல் படைத்து இறைவனை வழிபடுகின்ற ஒரு இனம் உண்டு என்றால் அது தமிழினம். தமிழர்கள் தான். தமிழன் என்றோரு இனம் உண்டு தனித்தே !அவனுக்கோர் குணம் உண்டு. அமிழ்தம் அவனது மொழியாம். அன்பே !அவனது வழியாம். -நாமக்கல் கவிஞர் மானமும், வீரமும் உயிர் என்று வாழ்ந்தவன் அறத்தின் வழி நின்று வாழ்ந்தவன் தமிழன். அணைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட கூடியவர்கள் தமிழர்கள் அதனால் தான் பாட்டன் திருவள்ளுவர் பாடினார் பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்சிறப்பொவ்வாமை செய்தொழில் வேற்றுமை யான் -திருவள்ளுவர் இந்த தமிழர் திருநாள் தை திரு நாள், இன்று அனைத்து உயிர்களும் இன்பம் நிறைந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

கருத்துகள்