அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் செயற்குழுக் கூட்டம் 2.01.2021 ஞாயிறு காலை 11.00 மணி அளவில் மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத்தின் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் செயற்குழுக் கூட்டம் 2.01.2021 ஞாயிறு காலை 11.00 மணி அளவில் மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத்தின் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரு. டி.வி. அழகர் திரு. வே. பால்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றத் துணைச் செயலாளர் திரு. கரு. ஆறுமுகம் அவர்கள் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் திரு. பி. வரதராசன் , லயன்ஸ் திரு. மகா கணேசன் , கவிஞர் திரு. இரா. இரவி , வழக்கறிஞர் கவிஞர் திரு. இராம. வைரமுத்து , கவிக்குயில் திரு. இரா. கணேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திரு. ரெ. கார்த்திகேயன் , திரு. சக்திவேல் , திரு. பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்களில் இலக்கிய மன்ற ஆண்டு விழாவைச் நடத்திடவும், எதிர்வரும் மார்ச் திங்களில் இலக்கிய மன்றத்தின் 22 ஆவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றியதுடன் மேலும் நான்கு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன. மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. இல. வெள்ளைச்சாமி அவர்கள் நன்றி கூறிட செயற்குழுக் கூட்டம் முடிவுற்றது. அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்ற செயற்குழுக் கூட்டத்தின் நிழற்படங்கள்.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்