படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! தவம் என்பது மதம் அல்ல, அறிவியல்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! தவம் என்பது மதம் அல்ல, அறிவியல் : மதம் மற்றும் கடவுள் என்ற பெயரில் பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்து குழந்தைகள் மனதில் பிரிவினையை வளர்ப்பதை தவிர்க்க வேண்டுமானால், குழந்தைகளுக்கு நுண்ணறிவை வளர்க்கும் கல்வியும், உடல் நலம் பேணும் முறைகளையும், தொழில் திறனை மேம்படுத்த உதவும் முறைகளையும், சமுதாயம் பற்றிய அறிவும், கடமையையும் பொறுப்பையும் உணரவல்ல கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டால் இன்றைய குழந்தைகள் நாளைய தலைசிறந்த தலைவர்களாக உருவாகி நன்மை செய்வார்கள் என்பது நிச்சயம். இது தவத்தின் மூலமே சாத்தியம். தவம் என்பது மதம் சார்ந்தது அல்ல, இது ஒரு அறிவியல். தன்னைப் பற்றி தானே அறிந்து கொள்ளும் நுண்ணறிவு திறனை தவம் தருகிறது என்று அறிவியல் பூர்வமாக இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் தன்னையறியும் அறிவுசார் பயிற்சியான தவத்தின் மூலம் வருங்கால சந்ததியினர்கள் ஒற்றுமையாவும், அன்பாகவும், ஆனந்தமாகவும் வாழ தவப் பயிற்சி உதவும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நல்லது நடக்கட்டும். தொடர்: உள்ளொளி பகுதி:10 #உள்ளொளி_

கருத்துகள்