நெல்லுக்கு கிறைத்த நீர் ! கவிஞர் இரா .இரவி !

நெல்லுக்கு கிறைத்த நீர் ! கவிஞர் இரா .இரவி ! நெல்லுக்கு கிறைத்த நீர் வீணாவதில்லை நெல் மணிகளாக விளைந்து செழிக்கும் ! முப்போகம் கண்ட விவசாயம் இன்று முழுவதும் பொய்த்து ஒரு போகத்திற்கு வழியில்லை ! கர்நாடகமோ காவிரியைத் திறக்க மறுக்கிறது கேரளமோ முல்லை பெரியாற்றில் உயர்த்திட தடுக்கிறது ! ஆந்திரமோ பாலாற்றின் குறுக்கே உயர்த்தி விட்டது அண்டை மாநிலங்கள் வஞ்சித்து மகிழ்கின்றன ! இரண்டு வெவ்வேறு நாடுகள் கூட தண்ணீரை இருவரும் அன்பாகப் பகிர்ந்து கொள்கின்றனர் ! ஒரே நாடான இந்தியாவில் தண்ணீர் பகிர்வதில் ஒருவருக்கொருவர் எந்நாளும் சண்டை ! பகிர்ந்து உண்ணும் பழக்கம் புரியவில்லை படிக்கவில்லை ஒப்பற்ற நம் திருக்குறள் ! வடக்கே ஆறுகளில் வெள்ளம் ஓடுகின்றன தெற்கே ஆறுகள் பாலைவனம் ஆகின்றன ! ஒரே நேரத்தில் வெள்ளமும் வறட்சியும் ஒரே நாட்டில் வருவது முறையோ சிந்திப்பீர் ! நெல்லுக்கு இறைக்க தண்ணிர் தாருங்கள் நாளும் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் ! வீணாக்க கடலில் கலக்கும் தண்ணீரை விவேகமாகப் பயன்படுத்திட முன்வாருங்கள் ! இருக்கின்ற அணைகள் இந்தியாவிற்கு போதும் இனி புதிதாக யாரும் அணை கட்டக் கூடாது ! விவசாயிகள் தற்கொலை நாடாதிருக்க வேண்டும் விவசாயிகள் மன மகிழ்வோடு வாழ வேண்டும் ! இமயம் முதல் குமரிவரை ஆறுகளால் இணைத்து இந்தியாவை வளமான நாடாக மாற்றுவோம் !

கருத்துகள்