பாடு பாப்பா விளையாடு! கவிஞர் இரா. இரவி

பாடு பாப்பா விளையாடு! கவிஞர் இரா. இரவி ஓடி ஆட விளையாட வேண்டும் பாப்பா ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் வேண்டாம் பாப்பா குழந்தைகளுடன் கூடி விளையாடு பாப்பா கூட்டமாக சேர்ந்து பாடி விளையாடு பாப்பா சுறுசுறுப்பாக விளையாடி மகிழ்ந்திடு பாப்பா சோம்பேறியாக என்றும் இருந்திடாதே பாப்பா எறும்பின் சுறுசுறுப்பை உற்றுப்பார் பாப்பா எப்போதும் இயங்கிடும் இயக்கம் பார் பாப்பா தேனீயைப் போல நாளும் இருந்திடு பாப்பா தேன் போல இனிமையாகப் பேசிடு பாப்பா கோபம் எப்போதும் வேண்டாம் உனக்கு பாப்பா கனிவுடனே குழந்தைகளுடன் பழகிடு பாப்பா யாரையும் அடிக்கும் வன்முறை வேண்டாம் பாப்பா எல்லோரையும் அன்பால் இரசித்து மகிழ்ந்திடு பாப்பா அலைபேசி விளையாட்டு வேண்டாம் பாப்பா அலைபோல அலைந்து விளையாடு பாப்பா தொலைக்காட்சித் தொடர்கள் பார்க்காதே பாப்பா தொலைத்து விடும் உந்தன் சுறுசுறுப்பை பாப்பா பொய் சொல்லக் கூடவே கூடாது பாப்பா மெய் மட்டுமே எப்போதும் பேசிடு பாப்பா பெரியவர்களை என்றும் மதித்திடு பாப்பா போதனைகளை நன்கு கவனித்திடு பாப்பா பாடு வாய்விட்டு பாடல்கள் பாடு பாப்பா பண்பாட்டை பறைசாற்றும் பாட்டு பாடு பாப்பா

கருத்துகள்