தந்தை பெரியார் பிறந்தநாள்! செப்டம்பர் 17 சமூகநீதி நாள்!

தந்தை பெரியார் பிறந்தநாள்! செப்டம்பர் 17 சமூகநீதி நாள்! தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி வென்றெடுக்கும் நாளாக கொண்டாட மாண்புமிகு அன்பு முதல்வராம் ஸ்டாலின் அறிவித்தார்! நன்றியுடன் வாழ்த்துகிறோம் நாம். சாதிமத பேதங்கள் இல்லா சமத்துவத்தை, நீதியை நாளும் நிலைநாட்ட முன்வருவோம்! மேதினியில் பெண்கள் சமஉரிமை காண்பதற்கு பாடுபட சூளுரைப்போம் சூழ்ந்து. அடக்குமுறைக்(கு) அஞ்சாமல் கொள்கை முழக்க அடலேறாய்ப் போராடி வாழ்ந்த பெரியார் பகுத்தறிவுப் பாசறைச் சாதனைகள் இன்றும் மகத்தாக வாழ்கிறது சொல். மதுரை பாபாராஜ்

கருத்துகள்