நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி

நண்பர்கள் ! கவிஞர் இரா.இரவி கோடிப் பணத்தை விட உயர்ந்தவர்கள் நண்பர்கள் ! சொத்துக்களை விட சிறந்தவர்கள் நண்பர்கள் ! துன்பம் என்றால் திரண்டு விடுவார்கள் நண்பர்கள் ! துயரத்தின் போது தோள் கொடுப்பவர்கள் நண்பர்கள் ! எதுவும் செய்வார்கள் எதையும் இழப்பார்கள் நண்பர்கள் ! குடத்து விளக்கான நம்மை குன்றத்தில் வைப்பார்கள் நண்பர்கள் ! கூட்டமாகக் கூடி கூத்துக் கட்டுவார்கள் நண்பர்கள் ! நேரம் செல்வதை மறக்கடிப்பவர்கள் நண்பர்கள் ! புண்பட்ட மனதிற்கு மருந்தாவர்கள் நண்பர்கள் ! வாழ்வின் இருள் நீங்க வழிகாட்டி ஒளி தருவார்கள் நண்பர்கள் ! தவறான பாதை சென்றால் தட்டிக் கேட்பவர்கள் நண்பர்கள் ! எதிரிகளை அடக்குவார்கள் பகைவர்களை பயப்படுத்துவார்கள் நண்பர்கள் ! ஏணியாக இருப்பார்கள் தோணியாக வருவார்கள் நண்பர்கள் ! காதலுக்கு துணை நிற்பார்கள் காதலி கரம் பிடிக்க உதவுவார்கள் நண்பர்கள் ! உயிருக்கு உயிரானவர்கள் என்றும் மறக்கமுடியாதவர்கள் நண்பர்கள் !

கருத்துகள்