நண்பன் ! கவிஞர் இரா .இரவி

நண்பன் ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் நான்கிலும் மேலானவன் நண்பன் ! மூன்றாவது கை ஏழாம் அறிவு நண்பன் ! நல்வழிப் படுத்துவான் நல்லதை உரைப்பான் நண்பன் ! அன்பின் சின்னம் ஆற்றலின் வடிவம் நண்பன் ! தோள் கொடுப்பான் துணை நிற்பான் நண்பன் ! பகையை எதிர்ப்பான் பாசம் பொழிவான் நண்பன் ! உதவிகள் செய்வான் உணர்வில் கலந்தவன் நண்பன் ! உதிரமும் தருவான் உயிரையும் காப்பான் நண்பன் ! நேரம் செலவழிப்பான் நேர்வழி நடந்திடுவான் நண்பன் ! கணக்குப் பார்க்காமல் செலவுகள் செய்வான் நண்பன் ! பெற்றோரிடம் பேசாததையும் பேசி மகிழ்வான் நண்பன் ! மனம் திறந்து பேசுவான் மகிழ்ச்சி தருவான் நண்பன் ! விட்டுக் கொடுப்பதில் கெட்டிக்காரன் நண்பன் ! விழாமல் என்றும் முட்டுக் கொடுப்பவன் நண்பன் ! தவிக்க விடாமல் தந்து உதவுவான் நண்பன் ! தேவை என்றால் கேட்டும் பெறுவான் நண்பன் ! இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் தொடருவான் நண்பன் ! அறிவில் சிறந்தவன் ஆறுதல் தருபவன் நண்பன் ! ஏணியாக இருப்பான் தோணியாவும் இருப்பான் நண்பன் ! எதிர்பார்ப்பின்றி உதவிடுவான் எந்த நேரமும் காத்திடுவான் நண்பன் ! உலகில் உயர்வானவன் உள்ளம் கவர்ந்தவன் நண்பன் ! தவறைத் தட்டிக் கேட்பான் சரியைப் பாராட்டி மகிழ்வான் நண்பன் ! அறியாததை அறிய வைப்பான் தெரியாததைத் தெரிய வைப்பான் நண்பன் ! துன்பத்தில் துணை நிற்பான் இன்பத்தில் பங்கு பெறுவான் நண்பன் ! வாழ்நாளில் அதிகம் உடன் இருப்பான் நண்பன் ! அறச்சீற்றம் கற்ப்பிப்பான் அஞ்சாமை போதிப்பான் நண்பன் ! இணை இல்லை இவ்வுலகில் நண்பன் !

கருத்துகள்