படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஒரு உலக செய்தி வந்துள்ளது நம் இசைஞானியை பற்றியது. ஒன்று நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உலகளவில் இசை சம்பந்தமாக தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பொழுது அவ்வளவு எளிதில் இப்போது கணிப்பு செய்துள்ள குளோபல் இசை நிறுவனம் அவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் இசைத்த ஒவ்வொரு பாடல்களும் இசை குறிப்பின்படி எல்லோரும் வாசிக்கும் அளவிற்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் தான் பின் உள்ளே நுழைய முடியும். நம் இசைஞானி என்ன சும்மாவா! நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன் யாரொருவர் உலகத்தில் வயலின் ,புல்லாங்குழல் , கித்தார் இந்த மூன்றையும் முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இசை ராகத்தை வரவழைக்கும் திறமைசாலிகள் மட்டும் மிக மிகக் குறைவு. அதில் நம்முடைய பண்ணைபுரத்து விஞ்ஞானி இசைஞானி மிகத் திறமையானவர். அதனால் தான் உலகத் தரவரிசையில் பத்து இடத்திற்குள் நம் இசைஞானி இருக்கிறார். நினைத்துப் பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 25 தர வரிசைக்கு நுழைவது என்பது மிக ! மிக! மிக! கடினம். நம்முடைய இசைஞானி இசை தெய்வம் இதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு ஒன்றும் தெரியாத சாதாரண நபராக உலா வந்து கொண்டிருக்கிறார். இத்தகைய பெருமை சேர்த்த இன்னிசை ஆசானுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!. இந்த பாராட்டு வரிகளை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தரவரிசையில் இருக்கின்ற 25 நபர்களில் 14 பேர் அமெரிக்கர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்த இருபத்தைந்து இடங்களுக்குள் நுழைவதற்கு. படைப்பு: உங்கள் புதுவை கவிஞர் சாந்தன் வரதன் பிள்ளை,B. Tech ( முடிந்தவரை அனைவரும் பார்த்து இதனை அவர் காதுக்கு சென்றடையும் வரை உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்) என்ன அற்புத விந்தை! உலகத் தரவரிசையில் 9-ஆம் இடத்தில் நம் இசை தந்தை! உலகத் தரவரிசையில் பத்து இடத்தில் மிக கடினம்! அமெரிக்கரின் இசை ஆதிக்கத்தை அசைத்து 25 இடத்திற்கு உள்ளே நுழைந்தது பண்ணைபுரத்து இசை! நாடி நரம்பு எல்லாம் இசையோடு வாழ்பவர்கள் மட்டுமே இடம் பெற முடியும்! அந்த விதத்தில் சாதித்துவிட்டார் இசைஞானி! உலக மக்கள் யார் இந்த இசைஞானி என்று தேடும் பொருள் ஆகிவிட்டார்! இவருடைய எல்லா பாடல்களும் கேட்க கேட்க அருமை தான்! உலகத் தரவரிசையில் 9ஆம் இடத்தில் இடம் கிடைத்ததற்கு இந்தியாவுக்கு பெருமை தான்! by puduvai poet Er .V. Sandane Varadhapillai, B. Tech

கருத்துகள்