பணம் இருந்தாலும் மனம் வேண்டுமே ! கவிஞர் இரா .இரவி

பணம் இருந்தாலும் மனம் வேண்டுமே ! கவிஞர் இரா .இரவி மதுரை செனாய் நகரில் உள்ள இளங்கோ மாநகராட்சி இரு பாலர் பள்ளி .இங்கு பயின்ற HCL நிறுவனத்தின் அதிபர் சிவ் நாடார் அவர்கள் கோடிகள் செலவழித்து பள்ளியை கட்டி எழுப்பி ,புதுப்பித்து தனியார் மெட்ரிக் பள்ளி அளவிற்கு தரம் உயர்த்தி உள்ளார் .பணியாற்ற பணியாளர்கள் நியமித்து மாதா மாதம் ஊதியமும் வழங்கி வருகிறார் .ஒரு இடத்தில கூட தன் பெயர் இடம் பெற வேண்டாம் என்றும் சொல்லி உள்ளார் .இந்தத்தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்கள். .உயர்ந்த மனம் வாழ்க .இங்குதான் மேல்நிலை இரண்டு ஆண்டுகள் படித்தேன் .நான் படித்த பள்ளி சிறப்பானதில் மகிழ்ச்சி .சின்ன வருத்தம் நாங்கள் படிக்கும் பொது ஆண்கள் மட்டுமே படித்தோம் .தற்போது இரு பாலர் பள்ளியாகி விட்டது .

கருத்துகள்