படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! புதிய முயற்சி ஒரு வரியிலும் பொருள் தரும் திருக்குறள் * திருக்குறள் ஒன்னே முக்கால் (1 - 3/4 ) அடி என்று சொல்லுவார்கள். இரண்டு வரிகள் கூட முழுமையாக இல்லாத "குறள்" உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மிகப்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. *திருக்குறளில் பல "குறள்களை" பாதியாக எடுத்துக் கொண்டாலும் முழுமையான பொருள் தரக்கூடிய சிறப்பு பெற்றதாக உள்ளது* அப்படி செய்த ஒரு சிறு முயற்சி தான் கீழ்கண்ட பாதி "திருக்குறள்கள்". 1. நீரின்று அமையாது உலகு. 2. செயற்கரிய செய்வார் பெரியர். 3. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை 4.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ? 5.அன்பிலார் எல்லாம் தமக்குரியர். 6.அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. 7.நன்றி மறப்பது நன்றன்று. 8.நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 9.அடக்கம் அமரருள் உய்க்கும். 9.அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 10.எல்லார்க்கும் நன்றாம் பணிதல். 11.யாகாவாராயினும் நாகாக்க 12. ஆறாதே நாவினால் சுட்ட வடு. 13. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் 14.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம். 15. தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் . 16.சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். 17.ஈதல் இசைபட வாழ்தல். 18.தோன்றின் புகழோடு தோன்றுக. 19.உலகம் பழித்தது ஒழித்து விடின். 20.பொய்மையும் வாய்மை இடத்தே. 21.கற்க கசடற கற்பவை. 22.முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர். 23.மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. 24.அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 25.எண்ணித்துணிக கருமம் 26.மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. 27.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். 28.முயற்சி திருவினையாக்கும். 29.முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். 30.இடுக்கண் வருங்கால் நகுக. 31.செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. 32.அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக. 33.இல்லாரை எல்லாரும் எள்ளுவர். 34.நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. 35.இடுக்கண் களைவதாம் நட்பு. 36.பணியுமாம் என்றும் பெருமை. 37.சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. 38.மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர். 39.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். 40.மக்கள் போல்வர் கயவர். *கல்வியில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நீ.....ண்ட நாள் ஆகிவிட்டது* அன்புடன், எஸ்.சுப்ரமணி, பொதுச் செயலாளர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்

கருத்துகள்