சொன்னான் கிழவன் அறிவு உழவன்! தந்தை பெரியார் !

நான் ஒன்பது வயதுக்குமேல் எந்தப் பள்ளியிலும் வாசித்தவனல்ல. 29க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து சலித்தவன். எல்லாப் பதவிகளும் நான் துப்பிப் போட்ட எச்சில்கள். துரோகம் செய்து அயோக்கியனாய் வாழும் அவசியம் எனக்கு வந்ததில்லை. நான் சொன்னதை நானே மாற்றி இருக்கிறேன். அது எனது சுயநலத்துக்காக அல்ல. நான் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள். என் கருத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. யாரிடமும் நல்ல பெயர் வாங்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. என்னுடைய நேர்மை தான் என்னை இத்தனை ஆண்டுகள் உயிரோடு வைத்திருக்கிறது. பதவிக்கு போனால் நானே நேர்மையாக இருக்க முடியாது. நான் அழிவுவேலைக்காரன். மக்களை பிரிக்கும் அத்தனையும் அழிய வேண்டும் என்கிறேன். கோயிலில் சமத்துவம் இருந்தால் எனக்கு கோயிலைப் பற்றியும் கவலை இல்லை. ஓய்வு எடுப்பது எனக்குப் பிடிக்காது.சாகும் வரை செயல்பட வேண்டும். நான் சாப்பிட நான் உழைக்க வேண்டும். மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு என்னை எப்போதும் பழக்கிக் கொண்டே வருகிறேன். எல்லாரும் ஒண்ணு என்று சட்டம் போடு. மீறினால் அவனை ஜெயில்ல போடு. இதுதான் என் ஆசை. 1000 ராமசாமி 1000 வருஷம் பாடுபட்டாலும் சாதியை ஒழிக்க முடியாது. மாற்ற முடிகிறதோ இல்லையோ நான் சாவதற்கு முன் எதையாவது செய்ய வேண்டாமா? ஒரு பெரிய மலையை நகர்த்த நினைக்கிறேன். மயிரை வைத்து இழுக்கிறேன். வந்தால் மலை. போனால் மயிறு! _ சொன்னான் கிழவன் அறிவு உழவன்! தந்தை பெரியார் !

கருத்துகள்