ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.

ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி. தவறான முடிவால் தடம் மாறி வருகின்றனர் தரமானவர்கள்! அதிசயம் தான் பச்சை மருதாணி சிவப்பாக்கி விடுவது! முந்தித் தருவதாக எண்ணி சிலர் இறக்குமுன்னே கொல்கின்றனர்! யாராலும் இன்னும் எழுதப்படவில்லை நல்ல கவிதை! அம்மியும் உரலும் வழக்கொழிந்ததால் பெருகியது நோய்! பல நாட்களில் கட்டியதை சில நொடிகளில் அழிக்கும் மனிதன் தேன்கூடு! மாற்றம் ஒன்றே மாறாதது எதிர்கட்சி ஆளும்கட்சியானது ஆளும்கட்சி எதிர்கட்சியானது! விடுமுறை தினங்களில் அடக்கமாகி விடுகின்றனர் தொலைக்காட்சிப் பெட்டிமுன்! குறைந்த அளவு எண்ணிக்கை துக்கத்திற்கும் விழாவிற்கும் கொரோனா விளைவு! வெற்றி குறைவு தோல்வி அதிகம் காதல்! கவலை வேண்டாம் கொள்ளி போட மகன் இல்லை மின்சாரத்தகனம்! இணைந்தவர் சிலரே பிரிந்தவர் பலரே காதல்! சனி ஞாயிறு இல்லை என்றால் புதன் எடு கொண்டாடு அசைவம்! தொட்டுத் தொடரும் இனிய உணர்வு காதல்! அடுக்கியது யாரோ? இவ்வளவு அழகாக மக்காச்சோளக்கதிர்! பயன்படுத்தாததால் துருப்பிடித்தது மனித மூளை!

கருத்துகள்