படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. உழைப்பும் நம்பிக்கையும் .

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. உழைப்பும் நம்பிக்கையும் .. உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயர வேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்... நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விட வேண்டும்... நீங்கள் எடுக்கும் செயலில் ஒன்று பட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும்... ஊக்கமின்றிச் சோர்ந்து இருப்பீர்களானால் அதுவே தாழ்வாய் உருவெடுக்கும்... செயலில் ஒன்றுபடும் போது தான் உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும். அப்போது வெற்றி அன்னை உங்கள் கரம் பிடித்து அழைத்துச் செல்வாள்... குறிக்கோளை அடைய செயல் திட்டத்தை வகுத்து விட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள். ஆயிரம் 'தொலைவு அளவு அலகு' (கிலே மீட்டர்) பயணம் ஆயினும் அது ஓரடியில் தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி... வெற்றி கிடைக்குமா...? என்று அய்யத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடியினை எடுத்து வையுங்கள்... அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோர்ந்தே இருப்பது, இடையிடையே விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக்கனியாகும்... ஆம் நண்பர்களே. வெற்றியெனும் செடி வேர்பிடித்து விட்டதா? என்று பிடுங்கிப் பார்த்து நட வேண்டாம், உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள். நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது வெற்றியின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது. இணையும் போது வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்து விடுகிறது. அறிந்து கொள்ளுங்கள். "உழைப்பே உயர்வு, உறக்கம் தாழ்வே.

கருத்துகள்