2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * எதை நினைத்துப் பெருமைப்படலாம்? தற்காலிகங்களின் பொய்க்கால் குதிரையாயிருக்கிற, மாறுகிற உலகில் எதை நினைத்தும் பெருமைப்படுவதற்கில்லை. * காதல் எப்போது தோற்றுப்போகிறது? சில காதலர்கள் வெற்றிபெறும்போது. * அம்மாவின் கை மணம் போல் எதுவும் வருவதில்லையே, ஏன்? பழக்கமே காரணம். தொடக்கத்தில் பழக்கமானது அடக்கத்திற்குப் போகும் வரை ஆனந்தம் அளிக்கிறது. * ஆயுளை அதிகரிக்க வழி? விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் நொடி நிமிடமாய் நீளும். * யார் உண்மையான பணக்காரர்கள்? உணவுக்குப் பறக்காதவர்கள்.

கருத்துகள்