2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * எது உண்மையான சாதனை? சாதனை செய்ய வேண்டும் என்று வேட்கை இல்லாமல் இயல்பாக வாழ்வது நல்லது. * சிலர் மனிதர்களைவிட விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்களே? மனிதர்களையும் நேசிக்க வேண்டும்; மனிதக் குரங்குகளையும் நேசிக்க வேண்டும்; குரங்கு மனிதர்களையும் நேசிக்க வேண்டும்; அதுவே மனிதநேயம். * பெருக்கலின் மதிப்பு கூட்டலின் மதிப்பை விட அதிகமாகத்தானே வரும்? விதிவிலக்கு உண்டு. ஒன்றை ஒன்றோடு கூட்டினால் இரண்டு; பெருக்கினால் ஒன்று மட்டுமே. இருமை ஓர்மையாகும்போது உண்டாவதே இறைமை. * பொதுப்புத்தி என்றால்? மேலோட்டமான நுட்பமற்றப் புரிதல். * தேடுவதை நிறுத்தினால் தேடியது கிடைக்குமா? தேடியதை விடச் சிறந்தது கிடைக்கும். * பரிதாபமான உண்மை எது? வீட்டிற்கு முன்பு நெல் வயல்கள் வைத்திருப்பவர்களை விட... புல்வெளிகள் வைத்திருப்பவர்களே பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

கருத்துகள்