07.05.2021-அன்று மாலையில் இணையவழியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கவியரங்கம் நடந்தது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில்.

07.05.2021-அன்று மாலையில் இணையவழியில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கவியரங்கம் நடந்தது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில். தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு மு..க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டும் விதமாக பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வாழ்த்துக் கவியரங்கம் இன்று இணையவழியில் நடைபெற்றது. கவியரங்கிற்கு கவிஞர் பேரா தலைமை தாங்கினார். கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, (சென்னை) தொடக்கவுரை வழங்கி கவியரங்கினைத் தொடங்கிவைத்தார். தொடக்கக் கவிதையை கவிஞர் பேரா வாசித்தார். தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் ஜெ.தேவி, திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா,மதுரை கவிஞர் இரா.இரவி ,கவிஞர் பாப்பாக்குடி அ.முருகன்,அருப்புக்கோட்டை கவிஞர் இரா.துளசிராமன் ஆகியோர் கவியரங்கில் கலந்துகொண்டு வாழ்த்துக் கவிதை வாசித்தார்கள். நிகழ்ச்சியில் கவிஞர்கள் 'கல்லூரி மாணவ மாணவிகள் பலர் இணைந்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா செய்திருந்தார்.

கருத்துகள்