28.3.2021 தேதியிட்டராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முது முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

28.3.2021 தேதியிட்டராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முது முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * யார் தோல்வியடைவதே இல்லை? யாருடனும் போட்டி போடாதவர்கள்! * அனுபவத்தால் முதிர்ச்சி வந்துவிடுமா? அனுபவங்களால் பக்குவப்படும் மனநிலை உள்ளவர்களே எதற்கும் அதிர்ச்சியடையாத முதிர்ச்சியைப் பெறுவார்கள். பலருக்கும் அனுபவம் என்பது ஒற்றைப் பரிமாணமாகவே இருக்கிறது. பன்முகப் பரிமாணமாக மாறும்போது மட்டுமே முதிர்ச்சி சாத்தியம். * 'அழுக்குத் துணி' என்பது சரியா? அழுக்கான சொல். 'பயன்படுத்திய துணி' என்றோ, 'துவைக்க வேண்டிய துணி' என்றோ, 'அணிந்த துணி' என்றோ அழைப்பதே முறை. * எது 'மிடுக்கு'? சுயமதிப்பபுடனும், சுய மரியாதையுடனும் இருப்பது. * உபரிப் பொருளாதாரம் சிறந்ததா, பற்றாக்குறைப் பொருளாதாரம் சிறந்ததா? பற்றாக்குறையிலிருந்து உபரிக்குச் செல்லும்போது ஒவ்வொரு ரூபாயின் அருமையும் புரியும்; பற்றாக்குறையில் பரிதவிப்பவர்களுக்குப் பரோபகாரம் புரியவும் மனம் துடிக்கும். * முனிவரின் தவத்தை ஊர்வசி, ரம்பை ஆகியோர் கலைக்க முடியுமா? தவமிருந்து எலும்பும், தோலுமாய்க் காட்சியளிக்கும் முனிவர்களிடம் எந்த ஊர்வசி வரப்போகிறாள்! தவம் என்ற பெயரால் அவர்கள் அடக்கி வைத்த உணர்ச்சிகளின் மாயத் தோற்றங்கள் அவை.

கருத்துகள்