28.3.2021 தேதியிட்டராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

28.3.2021 தேதியிட்டராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * தொட்டதெல்லாம் துலங்க வேண்டுமென்றால்.... துலங்கக் கூடியவற்றை மட்டும் தொட வேண்டும். * சில சிக்கல்களைத் தீர்ப்பது சிரமமாக இருக்கிறதே? சிலநாட்கள் கண்டுகொள்ளாமலிருந்தால் தானே சரியாகிவிடும் சிக்கல்கள் எவையும். * கடவுள் ஏன் கல்லானான்? ஐம்பொன் சிலையானால் கடத்தி விடுவார்கள் என்பதால்தான். * ஒரு மனிதனின் சுயரூபத்தை எப்போது அறிந்துகொள்ளலாம்? காலையில் தூங்கி எழும்போது சிலரைப் பார்க்க நேர்ந்தால்...அவர்களுடைய 'சுயரூபம்' வெளிப்படும். * ஒருவர், எப்படிப்பட்டவர் என்பதை எப்படி அறிவது? அவர் கையில் கொஞ்சம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்,தெரியும். * விமர்சனத்திற்கு ஏற்ற எதிர்வினை எது? சிலவற்றிற்கு எதிர்வினையாற்றாமலிருப்பதே சிறந்த எதிர்வினை.

கருத்துகள்