28.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-

28.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:- * 90 சதவிகிதத் தத்துவம் என்றால் என்ன? எந்தத் திட்டமும் தொண்ணூறு விழுக்காடு மக்களை முழுமையாகச் சென்று அடைந்தாலே அது தரமான செயல்பாடு எனக் கூறலாம்.இது நூறு சதவிகிதத்தை இலக்காகக் கொண்டு முழுமூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம். * எது உண்மையான காதல்? உருவங்கள் நாளடைவில் மங்கி, உள்ளங்கள் ஓங்கி, உணர்வுகள் ஒன்றும்போது உயிர்ப்பதே உண்மைக் காதல். * தலையிருக்க வால் ஆடலாமா? தலையைக் காப்பாற்றிக்கொள்ள பல்லி வாலைத் தியாகம் செய்யும்போது துண்டிக்கப்பட்ட வால் துள்ளுவதைப் பார்க்கலாம்.எப்போதும் தான் கத்தரித்து விடப்படலாம் என்ற ஞானோதயம் இருக்கும் வால்கள் துள்ளுவது இல்லை. * புதையல், பதுக்கல் என்ன வேறுபாடு? யாரோ புதைத்து வைத்தது நமக்குக் கிடைத்தால் புதையல். நாமே மறைத்து வைத்து எடுப்பது பதுக்கல். * அன்பு, அருள் என்ன வேறுபாடு? உறவாய்க் கொண்டவர்களிடம் மட்டும் தோன்றுவது அன்பு; கண்ணில் கண்ட எளியோரிடமெல்லாம் ஏற்படுவது அருள்.

கருத்துகள்