ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:9444012676, 044-24314347

ஆசிரியர் : முதுமுனைவர். வெ.இறையன்பு --நூல் :தோன்றியதென் சிந்தைக்கே... --முதல் பதிப்பு:மார்ச்-2021 --வெளியீடு :கற்பகம் புத்தகாலயம், சென்னை-17, போன்:9444012676, 044-24314347 வாசிப்பு கடலைப்போல விரிந்துகொண்டே போகிறது.நாமோ துடுப்புகூட இல்லாமல் துரும்போடு அதில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். * பலவற்றைப் பசியின் காரணமாக பொறுத்துக் கொள்கிறார்கள் பலர். * வரையறுக்க முடியாததாக வழுக்கிக்கொண்டு செல்கிறது வாழ்க்கை. * நேசம் என்பது நாமாகக் கொடுத்த பிம்பங்களால் முளைத்து நிஜம் தெரிகிறபோது கலைகிறது. * படித்ததைக் கொடுக்கவோ, படிக்க முடியாததை முடிந்தவர்களுக்குத் தரவோ மனமில்லை. அடுத்த தலைமுறைக்கோ தமிழில் பிழையின்றி வாசிப்பதே பெரும்பாடு. * நிரம்பி வழிகிற சூழலில் வெறுமையாய் நகரும் வாழ்க்கை. * இருள் அழகானது. * சமத்துவம் செப்பும் இருள் அனைவரையும் சமமாக்கும் நுட்பமுடையது. --

கருத்துகள்