7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:

7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * கொத்தடிமைகள் இன்னும் இருக்கிறார்களா? கொத்தடிமைகளின் எண்ணிக்கையைவிட கொத்துப் பரோட்டாவிற்கு அடிமையாய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். * சில நூல்கள் திரைப்படங்களாகும்போது ஏன் ஏகப்பட்ட எதிர்ப்பு வருகிறது? படிப்பவர்களைவிட பார்ப்பவர் எண்ணிக்கை அதிகம். எழுத்தாய்ப் படிப்பதைவிட காட்சியாய்ப் பார்ப்பது ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். * கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வெளியே தெரியாமல் உள்ளத்திலேயே கொண்டாடி மகிழ்வதுதான் உண்மையான கொண்டாட்டம். * கேள்வி கேட்பது நல்லதா? அரசாங்கத்தைக் கேட்டால் திறந்த நிர்வாகம்; அதிகாரத்தைக் கேட்டால் சிறந்த செயல்பாடு; அறிஞர்களைக் கேட்டால் மிகுநத அறிவாற்றல்; குழந்தைகளைக் கேட்டால் உயர்ந்த தேடல் என்று வினாக்களால் விழிப்படைகிறது மானுடம்.

கருத்துகள்