7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*

7.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-* * உதட்டுக்கு அணிகலன்கள் ஏதுமில்லை; காதுக்கு மட்டும் ஏன்? உரைக்கிற உதடுகளைவிட கவனிக்கிற காதுகள் முக்கியம் என்பதால். * தாவரங்களிடம் கண்ட வியப்பு என்ன? விண்ணை நேசிக்கும் ஆலமரத்தின் கனி சிறிதாகவும், மண்ணைத் தழுவும் பூசணிக்கொடியின் காய் பெரிதாகவும் இருந்து வியக்க வைக்கின்றன. * எந்த உறுப்பு முக்கியம்? மூக்கை நம்பி ஓநாய்களும், வாயை வைத்து நீர்யானைகளும், கால்களை நம்பி சிவிங்கிகளும், காதுகளைச் சார்ந்து மான்களும், தும்பிக்கையை நம்பி யானைகளும், இறகுகளை விரித்துப் பறவைகளும், பற்களைக் கொண்டு புலிகளும் உயிர்வாழ்கின்றன.உறுப்பின் முக்கியத்துவம் உயிருக்கு உயிர் வேறுபடுகிறது. * சாதனை செய்பவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? பரிசோ, பதக்கமோ, பாராட்டோ பெற்ற அன்று, உலகத்தின் உச்சியில் நின்று கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். ஓராண்டுக்குப் பிறகு அது சாதாரணமாகிவிடும். அதனால்தான் தொடர்ந்து ஏதாவது விருதைப் பெற சிலர் அலைகிறார்கள்.

கருத்துகள்